இதுவரை பார்க்காத புது தளபதி.. வாத்தி கம்மிங் வேற லெவல் ஓபனிங்.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ப்ரமோ!

சென்னை: மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் நேற்று வெளியாகி 6.2 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Recommended Video

VAATHI COMING | இது வரை பார்க்காத புது தளபதி INTRO | DHINESH MASTER EXCLUSIVE | FILMIBEAT TAMIL

குட்டி ஸ்டோரி பாடல் ஒரே நாளில் ஒரு கோடி பார்வைகளை கடந்த நிலையில், மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிளனா வாத்தி கம்மிங் பாடலும், ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டர், தளபதி விஜய் குறித்தும், வாத்தி கம்மிங் பாடலில் அவர் ஆடிய விதம் குறித்தும் பேசியுள்ள வீடியோவின் ப்ர்மோ தற்போது வெளியாகி உள்ளது.

யூடியூபில் முதலிடம்

யூடியூபில் முதலிடம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் மாஸ்டர். நேற்று அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிளான வாத்தி கம்மிங் பாடல், 6.2 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மண்ணுருண்ட

மண்ணுருண்ட

நேற்று முன் தினம் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்ற மண்ணுருண்ட பாடல் ரசிகர்கள் மனங்களை கவர்ந்த போதும், யூடியூபில் இதுவரை வெறும் 1.7 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. அதன் பிறகு வெளியான ஆர்யாவின் டெடி டீசர் மற்றும் வாத்தி கம்மிங் பாடல் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன.

தினேஷ் மாஸ்டர்

தினேஷ் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு கொரியோகிராஃப் செய்து வரும் தினேஷ் மாஸ்டர், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கும் கொரியோகிராஃபி செய்துள்ளார். ஷாஜகான், தமிழன், யூத், பகவதி, வசீகரா, போக்கிரி, அழகிய தமிழ் மகன், வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், துப்பாக்கி, தலைவா உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

புது தளபதி

புது தளபதி

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு, தர லோக்கல் குத்து டான்ஸ் அமைத்துக் கொடுத்துள்ள நடன இயக்குநர் தினேஷ், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். அதன் ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் ஓபனிங் பாடலான வாத்தி கம்மிங் ஒத்து பாடலில், இதுவரை காணாத புது தளபதியை பார்ப்பீங்க என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X