90 கோடி நஷ்டம்.. நான் விஜய்யோட பினாமியா?.. உண்மையை புட்டு புட்டு வைத்த சேவியர் பிரிட்டோ!
சென்னை: மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. நடிகர் விஜய்யின் பினாமி என சேவியர் பிரிட்டோ மீது கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், அதற்கெல்லாம் தற்போது தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
மேலும், தனக்கும் விஜய்க்கும் எப்படிப்பட்ட உறவு என்பது குறித்தும் சேவியர் பிரிட்டோ செம ஓபனாக பேசியுள்ளார். இந்த மாதம் பொங்கலுக்கு தனது மாப்பிள்ளை ஆகாஷ் முரளியை வைத்து சேவியர் பிரிட்டோ தயாரித்த நேசிப்பாயா படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இந்நிலையில், தொழிலில் தனக்கு ஏற்பட்ட 90 கோடி ரூபாய் நஷ்டம் குறித்தும் வெளிப்படையாக பேசி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சேவியர் பிரிட்டோ.
விஜய்க்கும் எனக்கும் என்ன உறவு: என்னோட மாமியாரும் விஜய்யின் அப்பாவும் சகோதர சகோதரிகள். ஆரம்பத்தில் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தும் போதே எனக்கு அவரை தெரியும். விஜயகாந்தையும் விஜய்யையும் வைத்து செந்தூரப்பாண்டி படம் எடுக்கும் போது சில நிதி நெருக்கடி ஏற்படும் போது தான் என்னை அவர்கள் சினிமாவுக்கு அழைத்தனர். அந்த படம் வெற்றிப் பெற்ற நிலையில், ரசிகன் படத்தையும் என்னையே விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பண்ண சொன்னார்.
90 கோடி நஷ்டம்: சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாதுங்க. என்னோட பிசினஸே வேறு. என்னோட மனைவி மூலம் தொடங்கப்பட்ட கால்பந்தாட்ட போட்டி சொதப்பிய நிலையில், சுமார் 90 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் விஜய் எனக்கு உதவும் விதமாக தன்னுடைய படத்தை எடுத்துப் பண்ணும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார். மற்றபடி எனக்கும் அவருக்கும் தொழில் ரீதியாக எந்தவொரு தொடர்பும் இல்லை.
விஜய் பினாமியா?: மாஸ்டர் படத்தையே நான் தயாரிக்கவில்லை என்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவை சேர்ந்த தயாரிப்பாளர் லலித் குமார் தான் அந்த படத்தை தயாரித்தார் என்றும் விஜய்யின் பினாமி நான் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. அதெல்லாம் 110 சதவீதம் சுத்தமான பொய். லைன் புரொட்யூசராகத்தான் அதுவும் விஜய் சொல்லித்தான் லலித் குமார் உள்ளே வந்தார். நான் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர் என சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











