ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு ‘காதல்’ வளர்த்தேன்: மனம் திறக்கும் தனுஷ்
சென்னை: இள வயதில் திருமணம் செய்து கொண்டதால், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் நிறைய சண்டைகள் புரிதலுக்காக போட்டுள்ளேன் என தனுஷ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
சுள்ளான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் தனுஷ், ராஞ்ஷனா மூலம் ஹிந்திப்பட உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தனுஷ் தனது இள வயதிலேயே, அதாவது 21 வயதிலேயே சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 2004ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இத்தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு பையன்கள் உள்ளனர்.
தனுஷிடம் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி கேட்ட போது...

கல்யாணத்தால் மார்கெட் போகவில்லை...
நாங்க ரொம்ப சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டோம். ஆனால், அது என் பட வாய்ப்பை ஒருபோதும் பாதிக்கவில்லை.

சினிமாவுக்காக சொந்த வாழ்க்கை பாதிப்பு...
ஆனால், பட வாய்ப்புகளால் என்னால் மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. சினிமாவில் ஜொலிக்க சில சமயங்களில் இதைச் செய்து தான் ஆக வேண்டியுள்ளது.

நல்ல அப்பாவா இருக்கணும்....
ஒருவேளை நான் சரியான கணவனாக ஐஸ்வர்யாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால், என் குழந்தைகளுக்கு நல்லதொரு தகப்பனாகவே வாழ விரும்புகிறேன்.

நிறைய சண்டை போட்டோம்...
சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டதால், எங்களைப் பற்றி நாங்கள் புரிந்து கொள்வதற்கும், அடுத்தவருக்கு புரிய வைப்பதற்கும் மற்ற தம்பதிகளைப் போல் அதிக சண்டைகளைப் போட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











