படையப்பா, தேவர் மகன் படங்களில் மீனா நடிக்க வேண்டியதா?.. அம்மாவால் மிஸ் ஆகிடுச்சுன்னு வேதனை!
சென்னை: படையப்பா மற்றும் தேவர் மகன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டேன் என நடிகை மீனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த படங்களில் தனக்கு எந்த மாதிரியான ரோல் கிடைத்தது. எப்படி மிஸ் ஆனது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார்.
குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் மீனா. அவரது அம்மா ராஜ் மல்லிகா மீனா குழந்தையாக இருந்ததில் இருந்தே அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்து வந்த நிலையில், இன்னமும் மீனாவை அக்கறையுடன் பார்த்து வருகிறார்.

சில படங்கள் தனது மகளுக்கு செட்டாகும் என்றும் சில படங்கள் செட்டாகாது என்றும் அவ்வப்போது நடிகை மீனா அவருக்கு அட்வைஸும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அம்மாவின் பேச்சால் சில பெரிய பட வாய்ப்புகளையும் இழந்துள்ளேன் என நடிகை மீனா அளித்துள்ள புதிய பேட்டியில் கூறியுள்ளார்.
தேவர் மகன் படத்தை மிஸ் பண்ணிய மீனா: குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த மீனா ஹீரோயினாக தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். கமல்ஹாசன் உடன் அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் நடித்த மீனா தேவர் மகன் படத்தின் வாய்ப்பை தவறவிட்டது குறித்து கூறியுள்ளார். அந்த படத்துக்காக மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது என்றும் சில மேக்கப்களில் போட்டோ எடுத்து பார்த்து பெரிதாக செட் ஆகவில்லை என்கிற நிலைமையில் மஞ்சள் பூசிய முகமாகவும் மேக்கப் டெஸ்ட் நடத்தினர். ஆனால், கமல் சாருக்கு ஏதோ டிஸ்டர்பன்ஸ் இருந்தது. யாருக்குமே மேக்கப் இல்லாமல் நடிக்கும் போது மீனாவுக்கு மட்டும் மேக்கப் போட்டால் செட்டாகாது என நினைத்து எனக்கு பதில் ரேவதியை நடிக்க வைத்து விட்டார். அப்படித்தான் அந்த படத்தின் வாய்ப்பு பறிபோனது என்றார்.
நீலாம்பரி கேரக்டரில் மீனாவா?: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை, முத்து படங்களில் நடித்த மீனா படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், ரஜினி சாருடன்ஜோடியாக நடித்து வந்த நிலையில், திடீரென அவருக்கு அப்போஸிட்டாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என எங்க அம்மா தான் சொல்லி வேண்டாம் என தவிர்த்து விட்டார் என மீனா புலம்பியுள்ளார். செளந்தர்யா கேரக்டரில் நடிக்கிறீங்களான்னும் கே.எஸ். ரவிக்குமார் சார் கேட்டாரு, ஆனால், நடிச்சா நீலாம்பரி தான் என அந்த கேரக்டரையும் தவிர்த்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
அவ்வை சண்முகி கெட்டப் பார்த்து விட்டு: அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் லேடி கெட்டப் போட்டு வந்து முதன் முதலில் நிற்பதை பார்த்து விட்டு அப்படியே பேசாமல் நின்று விட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த எல்லோரும் ஆஹா ஓஹோன்னு பாராட்டுனாங்க, கமல் சார் என் பக்கத்துல வந்து என்ன எதுவுமே சொல்லல என்றார். சார் எனக்கு பேச்சே வரல, அந்த ஹேர் எப்படி பண்ணாங்க, அந்த மேக்கப் எப்படி பண்ணாங்க என பிரம்மித்துப் போய் நின்றேன் என நடிகை மீனா தனது திரை அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











