காப்பாத்தவே முடியாதுன்னு சொன்ன மகனுக்கு நெப்போலியன் கல்யாணம் பண்ணிட்டாரு.. நடிகை மீனா ஓபன் பேட்டி!
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணத்தில் கலந்துக்கொள்ள நடிகை மீனா ஜப்பானுக்கு சென்றிருந்தார். ஜப்பானில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அவர் திருமணத்துக்கு முதல் நாள் இரவு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் கலக்கலாக நடனமும் ஆடினார்.
திருமணத்தைத் தொடர்ந்து 3 நாட்கள் ஜப்பானை சுற்றிப் பார்க்க நெப்போலியன் ஏற்பாடு செய்த நிலையில், சரத்குமார், ராதிகா, குஷ்புவுடன் இணைந்து டூர் அடித்து விட்டு பல இடங்களில் நடனமாடிய வீடியோக்களையும் மீனா வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனுஷ் குறித்தும் அக்ஷயா குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். நெப்போலியனுக்கும் தனக்கும் ஏற்பட்ட நட்பு குறித்தும் மீனா மனம் திறந்து பேசியுள்ளார்.
நெப்போலியன் நட்பு கிடைத்தது எப்படி?: சினிமாவில் நடிக்கும் போது நெப்போலியன் பற்றி தெரியும். ஆனால், அதன் பின்னர் அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆனது குறித்து எனக்குத் தெரியவே தெரியாது. அவருடன் எந்தவொரு தொடர்பிலும் இல்லாமல் இருந்து வந்தேன். ஒருநாள் திடீரென நெப்போலியன் சாரின் 60வது பிறந்தநாளை கொண்டாட போகிறேன். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும். அமெரிக்கா வருகிறீர்களா? என அவரது மனைவி சுதா கால் பண்ணி கேட்டதும், ஓகே சொல்லிவிட்டேன். என்னையும் குஷ்புவையும் பார்த்ததும் நெப்போலியன் கண் கலங்கி அழுதுவிட்டார். அதன் பின்னர் குடும்ப நண்பர்களாக தொடர்கிறோம் என்றார் மீனா.
டாக்டர்கள் கைவிரித்த மகனுக்கு: பெரிய பெரிய மருத்துவர்களே தனுஷை குணப்படுத்த முடியாது என கைவிரித்த நிலையில், காப்பாத்தவே முடியாது என்கிற நிலைமையில் இருந்த ஒருவருக்கு கல்யாணமே செய்து முடித்துவிட்டார் நெப்போலியன். அவரை போல ஒரு சிறந்த தந்தை இருக்கவே முடியாது என மீனா புகழாரம் சூட்டியுள்ளார்.
அக்ஷயா தெளிவான பொண்ணு: தனுஷ் ரொம்பவே ஸ்மார்ட்டான பையன். எல்லா விஷயத்தையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர். அதே போலத்தான் அக்ஷயாவும் அவர் ஒரு இன்னொசன்ட்டான பொண்ணுன்னு நினைத்துவிட வேண்டாம். தனக்கு எது தேவை என்பதை நன்கு அறிந்துக் கொண்டு செயல்படும் நல்ல தெளிவான பொண்ணு தான் அக்ஷயா என மீனா மணமகள் பற்றியும் வெளிப்படையாக பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கலா மாஸ்டரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











