சின்ன வயசுதான் சீரியல்ல அம்மாவாக நடிக்கிறேன்... நாயகி வசந்தி இன்டர்வியூ
Recommended Video
சென்னை: நாயகி சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடிக்கும் வசந்தியை எல்லோருக்குமே பிடிக்கும். தமிழ் சினிமா, சீரியல் உலகத்திற்கு அழகான அம்மா கிடைத்திருக்கிறார். அவருக்கு விஜய் சேதுபதிக்கு அக்காவாகவோ, அம்மாவாகவோ நடிக்க ஆசை என்கிறார்.
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் அம்மாவாக அசத்துகிறார் மீரா கிருஷ்ணன். நாயகி சீரியரில் நாயகனின் அம்மா வசந்தி என்றால் அனைவருக்கும் தெரியும். தனது சீரியல் உலக பயணத்தையும், சினிமாவில் நடித்தது பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நடனம் ரொம்ப பிடிக்கும். நான் நடிகையாகும் முன்பு நடனம் கற்றுக்கொண்டேன். சீரியலில் வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்திருக்கிறேன். மார்க்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். கமல்தான் இயக்குநர். மலையாளத்தில் ஷோபனா, ரேவதி பிடிக்கும். ஷோபனா நடித்த மணிசித்ரதாழ் படம் போல ஒரு படத்தில் நடிக்க ஆசை. அதே போல மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீ வித்யா நடித்ததும் பிடிக்கும்.
சென்னையில் புடிச்ச இடம் கோடம்பாக்கம். திருமணமாகி செட்டில் ஆனது கோடம்பாக்கம்தான். சென்னையில் மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச். கேரளா கோட்டயத்தில் பீச் கிடையாது. மனசை ரிலாக்ஸ் பண்ற இடம். மகாபலிபுரம் மனசுக்கு புடிச்ச இடம். சென்னையில பல இடங்கள் பார்க்காம இருக்கேன். இப்போ சாய்பாபா கோவில். இஸ்கான் கோவில் போயிட்டு இருக்கேன்.
நடிக்கும் போது என்னோட சிரிப்பும் கண்களும் அழகா இருக்குன்னு சொல்வாங்க. சும்மா நின்னுட்டு இருந்தா கூட கண் நடிக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு 33 வயதுதான் சிறிய வயதிலேயே அம்மாவாக நடிக்க ஆரம்பிச்சிட்டேன். சினிமாவில் அக்கா, அண்ணி ரோலில் நடிக்க ஆசை
பிக்பாஸ் பாக்கறதே இல்லை. இன்னொருத்தர் வீட்டுக்குள்ள போய் எட்டி பார்க்க மாட்டேன். பசங்களையும் பார்க்க வேண்டான்னு சொல்லிட்டேன்.

என்னோட கணவர் சிவா லாரன்ஸ், ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருக்கிறார், அவர் நடித்த படம் ரொம்ப பிடிக்கும்.
இப்பவும் சினிமாவில் நடிக்க ஆசைதான். என்னோட பசங்க கொஞ்சம் பெரிய ஆள் ஆகட்டும்னு வெயிட் பண்றேன். விஜய் சேதுபதி கூட நடிக்கணும்னு ஆசை அண்ணி அக்காவாக நடிக்க ஆசை. யாராவது உங்களுக்கு அப்படி ஒரு கேரக்டர் தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க என்று சொன்னார்.
சென்னையை காப்பாற்றுவோம். தண்ணீரை சேமிப்போம். இயற்கையை காப்பாற்றுவோம் என்று கூறிய வசந்தியிடம்... மீரா கிருஷ்ணனிடம் வணக்கம் கூறி விடை பெற்றோம்.


Click it and Unblock the Notifications