»   »  விரக்தியில் மீரா ஜாஸ்மீன் என்னதான் நடிச்சாலும், தமிழ் ரசிகர்கள் தன்னை சரியாக கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே என வருத்தமாகவும்,விரக்தியாகவும் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.ரன், பாலா என சில படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் டல் நடிகையாகவே நீடித்துவந்தார். மணிரத்தினத்தின் ஆய்தஎழுத்து அவருக்கு சின்ன பிரேக்கைக் கொடுத்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழில் அதிகபடங்கள் அவரைத் தேடி ஓடி வரவில்லை. அவரும் தமிழ் சினிமாவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.இந்த காலகட்டத்தில் தாய்மொழியான மலையாளத்தின் பக்கம் அதிக கவனம் செலுத்தினார். மலையாளப் படங்கள் மாதிரி நல்லகதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் வருவதே இல்லை, தமிழில் நல்ல இயக்குனர்களும் இல்லை என்று மலையாளப்பத்திரிக்கைகளில் அங்கலாய்த்துக் கொண்டார் மீரா.இந் நிலையில்தான் அவரது குடும்பத்தினர் மூலம் பெரிய ஆப்பு வந்தது மீராவுக்கு. சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டனர் மீராவின் குடும்பத்தினர். மலையாள இயக்குனர் லோகிததாஸுடன் மீராவுக்கு இருந்த நெருக்கமே அவரதுசொத்துக்களுக்கு பெரும் எமனாக மாறி, குடும்பத்தினரிடமிருந்து விரட்டி அடித்தது.இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. தாஸை விட்டு மீரா விலகி வந்தால் சொத்துக்களைத் திருப்பித் தருவதாக அவரதுகுடும்பத்தினர் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்தார் மீரா.அப்படியே தெலுங்குக்குப் போய் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக ரவுண்ட் அடித்தார். அங்கு சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு தமிழில் கஸ்தூரி மான் என்ற படத்தைத் தயாரித்தார். அதை இயக்கியது மீராவின் லோகித தாஸே தான்.படம் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார் மீரா. அவர் எதிர்பார்த்தது போல படம்நன்றாகவே வந்தது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கையைக் கடிக்காத வருவாயைக் கொடுத்தது.கஸ்தூரி மானைத் தொடர்ந்து விஷாலுடன் சண்டக்கோழி படத்தில் நடித்தார்.சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்தும், மீராவுக்கு புதிய வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லையாம். மெர்க்குரிப் பூக்கள்என்ற ஒரே ஒரு படம் தான் கைசவம் உள்ளது. அதில் ஹீரோ ஸ்ரீகாந்த்.ஆனால், முன்னணி ஹீரோக்கள் யாரும் மீராவைக் கண்டுகொள்ளாததால் விரக்தியாகியுள்ளாராம் அவர்.தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பித்தான் (அதெல்லாம் ஜும்மா பொய்யி, போன டப்பை தமிழ் சினிமா மூலம்புரட்டத்தான் வந்தார் என ஒரு தரப்பு கூறுகிறது!

விரக்தியில் மீரா ஜாஸ்மீன் என்னதான் நடிச்சாலும், தமிழ் ரசிகர்கள் தன்னை சரியாக கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே என வருத்தமாகவும்,விரக்தியாகவும் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.ரன், பாலா என சில படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் டல் நடிகையாகவே நீடித்துவந்தார். மணிரத்தினத்தின் ஆய்தஎழுத்து அவருக்கு சின்ன பிரேக்கைக் கொடுத்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழில் அதிகபடங்கள் அவரைத் தேடி ஓடி வரவில்லை. அவரும் தமிழ் சினிமாவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.இந்த காலகட்டத்தில் தாய்மொழியான மலையாளத்தின் பக்கம் அதிக கவனம் செலுத்தினார். மலையாளப் படங்கள் மாதிரி நல்லகதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் வருவதே இல்லை, தமிழில் நல்ல இயக்குனர்களும் இல்லை என்று மலையாளப்பத்திரிக்கைகளில் அங்கலாய்த்துக் கொண்டார் மீரா.இந் நிலையில்தான் அவரது குடும்பத்தினர் மூலம் பெரிய ஆப்பு வந்தது மீராவுக்கு. சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டனர் மீராவின் குடும்பத்தினர். மலையாள இயக்குனர் லோகிததாஸுடன் மீராவுக்கு இருந்த நெருக்கமே அவரதுசொத்துக்களுக்கு பெரும் எமனாக மாறி, குடும்பத்தினரிடமிருந்து விரட்டி அடித்தது.இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. தாஸை விட்டு மீரா விலகி வந்தால் சொத்துக்களைத் திருப்பித் தருவதாக அவரதுகுடும்பத்தினர் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்தார் மீரா.அப்படியே தெலுங்குக்குப் போய் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக ரவுண்ட் அடித்தார். அங்கு சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு தமிழில் கஸ்தூரி மான் என்ற படத்தைத் தயாரித்தார். அதை இயக்கியது மீராவின் லோகித தாஸே தான்.படம் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார் மீரா. அவர் எதிர்பார்த்தது போல படம்நன்றாகவே வந்தது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கையைக் கடிக்காத வருவாயைக் கொடுத்தது.கஸ்தூரி மானைத் தொடர்ந்து விஷாலுடன் சண்டக்கோழி படத்தில் நடித்தார்.சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்தும், மீராவுக்கு புதிய வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லையாம். மெர்க்குரிப் பூக்கள்என்ற ஒரே ஒரு படம் தான் கைசவம் உள்ளது. அதில் ஹீரோ ஸ்ரீகாந்த்.ஆனால், முன்னணி ஹீரோக்கள் யாரும் மீராவைக் கண்டுகொள்ளாததால் விரக்தியாகியுள்ளாராம் அவர்.தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பித்தான் (அதெல்லாம் ஜும்மா பொய்யி, போன டப்பை தமிழ் சினிமா மூலம்புரட்டத்தான் வந்தார் என ஒரு தரப்பு கூறுகிறது!

Subscribe to Oneindia Tamil

என்னதான் நடிச்சாலும், தமிழ் ரசிகர்கள் தன்னை சரியாக கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே என வருத்தமாகவும்,விரக்தியாகவும் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.

ரன், பாலா என சில படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் டல் நடிகையாகவே நீடித்துவந்தார். மணிரத்தினத்தின் ஆய்தஎழுத்து அவருக்கு சின்ன பிரேக்கைக் கொடுத்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழில் அதிகபடங்கள் அவரைத் தேடி ஓடி வரவில்லை. அவரும் தமிழ் சினிமாவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த காலகட்டத்தில் தாய்மொழியான மலையாளத்தின் பக்கம் அதிக கவனம் செலுத்தினார். மலையாளப் படங்கள் மாதிரி நல்லகதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் வருவதே இல்லை, தமிழில் நல்ல இயக்குனர்களும் இல்லை என்று மலையாளப்பத்திரிக்கைகளில் அங்கலாய்த்துக் கொண்டார் மீரா.

இந் நிலையில்தான் அவரது குடும்பத்தினர் மூலம் பெரிய ஆப்பு வந்தது மீராவுக்கு. சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டனர் மீராவின் குடும்பத்தினர். மலையாள இயக்குனர் லோகிததாஸுடன் மீராவுக்கு இருந்த நெருக்கமே அவரதுசொத்துக்களுக்கு பெரும் எமனாக மாறி, குடும்பத்தினரிடமிருந்து விரட்டி அடித்தது.


இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. தாஸை விட்டு மீரா விலகி வந்தால் சொத்துக்களைத் திருப்பித் தருவதாக அவரதுகுடும்பத்தினர் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்தார் மீரா.

அப்படியே தெலுங்குக்குப் போய் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக ரவுண்ட் அடித்தார். அங்கு சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு தமிழில் கஸ்தூரி மான் என்ற படத்தைத் தயாரித்தார். அதை இயக்கியது மீராவின் லோகித தாஸே தான்.

படம் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார் மீரா. அவர் எதிர்பார்த்தது போல படம்நன்றாகவே வந்தது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கையைக் கடிக்காத வருவாயைக் கொடுத்தது.

கஸ்தூரி மானைத் தொடர்ந்து விஷாலுடன் சண்டக்கோழி படத்தில் நடித்தார்.

சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்தும், மீராவுக்கு புதிய வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லையாம். மெர்க்குரிப் பூக்கள்என்ற ஒரே ஒரு படம் தான் கைசவம் உள்ளது. அதில் ஹீரோ ஸ்ரீகாந்த்.


ஆனால், முன்னணி ஹீரோக்கள் யாரும் மீராவைக் கண்டுகொள்ளாததால் விரக்தியாகியுள்ளாராம் அவர்.

தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பித்தான் (அதெல்லாம் ஜும்மா பொய்யி, போன டப்பை தமிழ் சினிமா மூலம்புரட்டத்தான் வந்தார் என ஒரு தரப்பு கூறுகிறது!).

மலையாளப் படங்களை விட்டு விட்டு இங்கே வந்தேன். கஸ்தூரி மான், சண்டக்கோழி இரண்டு படங்களிலுமே நன்றாகநடித்திருந்தேன். ஆனாலும் புதிய வாய்ப்புகள் வரவில்லையே என்று அங்கலாய்க்கிறார் மீரா.

தமிழ் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று புலம்பும் மீரா, நல்ல கதையம்சத்துடன்கூடிய படங்களில் மட்டுமே தொடர்ந்து நடிக்கப் போவதாகவும், கிளாமரில் இறங்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்.

இன்னொரு குசுகுசு தகவலும் மீராவைப் பத்தி உலா வருகிறது. அதாவது விரைவில் அவர் கல்யாணம் கட்டிக் கொண்டுசெட்டிலாகப் போகிறார் என்கிறார்கள்.


ஆனால் மாப்பிள்ளை லோகிததாஸ் இல்லையாம் (இவருக்குத் திருமணமாகி பிள்ளைகுட்டிகள் இருக்கின்றன). மலையாள இளம்நடிகரும், பாரிஜாதம் பட நாயகனுமான பிருத்வி ராஜ் என்று அந்தத் தகவல் குசுகுசுக்கிறது.

சில கால்ததுக்கு முன் பிருத்விராஜைக் கூப்பிட்டு தங்களது மகளைக் கட்டிக் கொள்ளச் சொன்னவர்கள் மீராவின் பெற்றோர் தான்.அவரும் ஆசையாகத் தான் இருந்தார். ஆனால், லோகிததாஸை விட முடியாது என்று மீரா குழப்பியதால் அந்தத் திருமணம்நடக்கவில்லை.

இந் நிலையில் மீரா மனம் மாறிவிட்டதாகவும் பிருத்விராஜை கைப்பிடிக்கத் தயாராகிறார் என்றும் சொல்கிறார்கள்.

எந்தா குழப்பம் இது மோளே!


Read more about: meera jasmine in frustration

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil