60 வயதிலும் கலக்கும் சீனியம்மாள்.. அமிதாப்பச்சனுடன் நடிக்க ஆசை.. சூப்பரப்பு!
சென்னை : தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். இந்தியில் அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என மெர்சல் சீனியம்மாள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மெர்சல் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தார் சீனியம்மாள். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் .

தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சீனியம்மாள் பேய் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பேயாக நடித்து இருக்கிறார் சீனியம்மாள். இந்த பேய் படத்தில் நடித்தது குறித்து பேட்டியில் சீனியம்மாள் கூறும் போது பேய் படத்தில் நடித்தது கடினமாக இருந்தது. என்னை மலைகளில் ஏறி இறக்குவது படக்குழுவுக்கு பெரும் சவாலாக இருந்தது என்று கூறினார். இருந்தும் படம் சிறப்பாக வந்திருக்கிறது அது தான் மனநிறைவு என்றும் கூறியிருக்கிறார் .
சமீப பேட்டிகளில் சீனியம்மாள் நான் மேலும் சிறுவயதில் இருந்து தைரியமான ஆள் எதற்கும் பயப்படமாட்டேன் என்று கூறியுள்ளார். சிறு வயதில் கிராமத்தில் பேய் பற்றி பயத்தை எழுப்புவார்கள் ஆனால் இருட்டில் உற்று கவனித்து பேய் இருக்கிறதா என்று கவனிப்பேன் எனக்கு பேயை கண்டு பயம் இல்லை என்று அழுத்தமாக கூறினார் .

இவர் சமீபத்தில் அளித்த பேட்டிகளில் எனக்கு நடிகர் அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, என்று கூறியுள்ளார். ஏனெனில் தமிழில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் என அனைவருடன் நடித்து விட்டேன் ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறி உள்ளார் .
தனுஷ் உடன் சீடன் படத்தில் நடித்திருப்பார் சீனியம்மாள். தற்போது அசுரன் படத்தில் தனுசை வயதான கதாபாத்திரத்தில் பார்க்கும் போது தனுசின் அப்பா போலவே தனுஷ் இருப்பதாக சீனியம்மாள் கூறியுள்ளார் .

தற்போது சீனியம்மாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் போது ரஜினி மிக இயல்பாகவும் எளிமையாகவும் நடந்து கொண்டதாக சீனியம்மாள் கூறினார் .
60வயதிற்கு மேல் சினிமாவில் கலக்கி வரும் நடிகை சீனியம்மாள் பலரால் பாராட்டபட்டு வருகிறார். சில நடிகர்கள் சினிமாவில் மிக தாமதமாக தான் கவனிக்கப்படுவார்கள் இருந்தும் அடுத்தடுத்து தொடர் வாய்ப்புகளை பெற்று தங்களின் முழு திறனை காட்டி விடுவார்கள் அப்படி வெற்றி பெற்றவர் தான் சீனியம்மாள்.


Click it and Unblock the Notifications











