இனி ரொம்ப பொறுப்பா நடந்துப்பேன்.. பழைய ட்வீட் விவகாரம்.. வெளிப்படையாக பதில் சொன்ன மேதகு இயக்குநர்!
சென்னை: மேதகு படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இயக்குநர் கிட்டுவின் பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

மேதகு இயக்குநர் கிட்டுவின் பழைய ட்வீட்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அது தொடர்பாக மிகவும் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார் இயக்குநர் கிட்டு.
ஈழ விடுதலைக்காக போராடிய மாவீரர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவர் இயக்கிய மேதகு திரைப்படம் சமீபத்தில் BSvalue எனும் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேதகு திரைப்படம் குறித்தும் தனது பழைய ட்வீட் சர்ச்சைகள் குறித்தும் பதில் அளித்துள்ள இயக்குநர் கிட்டு தனது மனைவியின் பங்கு இந்த படத்தில் எந்த அளவுக்கு இருந்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்து வரும் தனது மகன் குறித்தும் பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











