மிக மிக அவசரம் பெண்களுக்கான படம் - ஸ்ரீபிரியங்கா எக்ஸ்க்ளூசிவ்

Recommended Video

ACTRESS SRI PRIYANKA INTERVIEW | MIGA MIGA AVASARAM MOVIE | FILMIBEAT TAMIL

சென்னை: மிக மிக அவசரம் திரைப்படம் பெண்களுக்கான படம், சுருக்கமா சொல்லணும்னா பெண்களுக்காகவே எடுக்கப்பட்டது. பெண்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ற படம்ணு சொல்லலாம். அதனால பயப்படாம குடும்பத்தோட போய் இந்த படத்தை பார்க்கலாம் என்று இப்படத்தில் நடித்த நாயகி ஸ்ரீபிரியங்கா தன்னுடைய அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்தோட டைரக்டர், கதைய சொல்லும்போதே எனக்கு கொஞ்சம் டிஃப்ரெண்ட்டான ஃபீலிங் இருந்தது. நீங்க படத்தை பாக்கும்போதே அது தெரிஞ்சிடும். உங்களுக்கும் கொஞ்சம் டிஃப்ரெண்ட்டான ஃபீலிங் இருக்கும். இந்த ஸ்க்ரிப்ட்வைஸா கேட்கும்போதே அவ்வளவு சூப்பர்பா இருந்தது.

Miga Miga Avasaram Sri Priyanka exclusive Interview

ஏன்னா பெண்களுக்கான படம்னு சொல்லும்போது, ஒரு எமோசனலா இருக்கும்போது, இந்த ஸ்க்ரிப்டை பேஸ் பண்ணி சொல்லும்போது, ஒரு கான்ஃபிடன்ட்டா என்னை சூஸ் பண்ணி பண்றதுங்கிறது பெரிய விஷயம். அதனால், அந்த ஸ்க்ரிப்டுல நான் ஒரு கான்ஸ்டபிளா நடிக்கிறதுங்கிறது கெத்தா கான்ஃபிடன்ட்டா சந்தோசமா இருந்தது.

அதோட, இந்த படத்துல நடிக்கும்போது அவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது. நான் இதுக்கு முன்னாடி நிறைய படம் பண்ணியிருந்தாலும், மிக மிக அவசரம் படம் ஒரு நல்ல மெசேஜ் குடுக்குக்கூடிய படம்கிறதுனால, எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு.

நிறைய படத்துல பெண்களை காமெடியா சொல்லி இருப்பாங்க. இல்லைன்னா சொல்லியும் சொல்லாதது மாதிரியெல்லாம் சொல்லியிருப்பாங்க. ஒரு ஸ்ட்ராங்கான விஷயத்தை இதுக்கு முன்னாடி வந்த படத்துல கூட நீங்க பாத்திருக்க முடியாது. அதனால ஸ்ட்ராங்கான ஒரு சொல்றதுக்கு கொஞ்சம் தைரியம் வேணும். இந்த படத்துல அதை நீங்க பார்க்கலாம்.

Miga Miga Avasaram Sri Priyanka exclusive Interview

நான் இதுக்கு முன்னாடி கங்காரு படத்துல நடிச்சிருக்கேன். அந்த படத்தை தயாரிச்சது சுரேஷ் காமாட்சி சார் தான். அந்த படத்தை டைரக்ட் பண்ணினது சாமி சார் தான். அந்த படத்துல நான் நடிச்சிருந்ததை பாத்துட்டு, இந்த படத்துல நீ இந்த கேரக்டர்ல நீ நடிச்ச நல்லா இருக்கும்னு நினைச்சிட்டு என்னை அப்ரோச் பண்ணினாங்க.

நான் இந்த படத்தோட ஸ்க்ரிப்ட்டை கேக்கும்போது, இந்த படத்துல என்னோட கேரக்டரான சாமந்தியா தான் ஸ்க்ரிப்டை கேட்டேனே தவிர எனக்குள்ள வேற கேரக்டரா நான் எதுவும் கேட்கலை.

நான் மொதல்ல தேங்க்ஸ் சொல்லணும்னா லிப்ரா புரொடக்ஷனுக்குதான் சொல்லணும். ஏன்னா அவங்க தான் இந்த படத்தை ரிலீஸ் பண்றாங்க. அதனால் எங்களோட படக்குழுவோட சார்பா திரும்பவும் அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் என்றார் ஸ்ரீபிரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X