17 வருட போராட்டம்.. 3 குழந்தைகளுடன் தன்னந்தனியாக பட்ட கஷ்டம்.. சீரியல் நடிகையின் கண்ணீர் கதை!
சென்னை: ஆச்சி மசாலா நிறுவனத்தில் எச்.ஆர். மேனேஜராக பணியாற்றி வந்த நடிகை கிருபா, சில விளம்பர படங்களில் நடித்தன் மூலம், சீரியல் நடிகையாக மாறியுள்ளார். ஈரமான ரோஜாவே சீரியலில் கேப்ரியல்லா, சுவாதி, சித்தார்த் கண்ணன், திரவியம் ராஜகுமரன் உள்ளிட்ட பலர் நடித்த தொடரின் கேப்ரியல்லாவின் அம்மாவாக நடித்து பிரபலமான இவர் தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியலில் அம்மாவாக கலக்கி வரும் இவர் நிஜத்திலும், 3 குழந்தைகளுக்கு தாயாக, தனி ஆளாக போராடி குழந்தைகளை வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை கிருபா, நான் சீரியலில் நடிப்பதற்கு முன் ஒரு சில விளம்பரத்தில் நடித்து இருக்கிறேன். அப்போது தான், ஒரு பெரிய சேனலில் இருந்து எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. அதை நான் பயன்படுத்திக்கொண்டேன், 40 வயதில் அனைவரும் ஓய்வு எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு அந்த வயதில் தான் வாய்ப்பே வந்தது. மேலும், என் பசங்க உங்களால் பண்ண முடியும், நடிங்க என்று சொன்னார்கள். அதன்பிறகு தான் நடிக்க வந்தேன். பொதுவாகவே அனைவரும் குழந்தைகளுக்காகத்தான் வாழ்கிறேன். அவர்கள், தான் என் வாழ்க்கை என்று சொல்வார்கள். என் வாழ்க்கையில் என் முதுகெலும்பு என் பசங்க தான். அவர்களுக்காக நான்.. எனக்காக அவர்கள் என்று தான் வாழ்த்து கொண்டு இருக்கிறோம்.

சீரியல் நடிகை கிருபா: 17 வருடமாக, மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு தனி ஆளாக போராடி வருகிறேன். நான் கணவரை விட்டு பிரிந்து வந்த போது பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருந்தேன். அதன் பிறகு எம்பிஏ எக்னாமிக் படித்தேன். அப்படியே வேலை செய்து கொண்டே எச்.ஆருக்கு படித்தேன். வேலை செய்து கொண்டு தான் என் குழந்தைகளை வளர்ந்து படிக்க வைத்தேன். அப்படியே எம்.எல்.சி கம்பேனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். கடைசியாக ஆச்சி மசாலா நிறுவனத்தில் எச்.ஆர். மேனேஜராக பணியாற்றினேன். இதுவரை நான் யாரிடமும் சிங்கிள் பேரண்ட் என்று சொன்னதே இல்லை. கணவர் இல்லை எனக்கு வேலை கொடுங்கள் என்று நான் யாரிடமும் கேட்டது இல்லை. நான் வேலை செய்கிறேன் அதற்கான சம்பளத்தை கொடுத்தால் போதும் என்று நினைப்பேன்.
என்னுடைய மூன்று குழந்தைகளை வளர்ப்பதை நான் பெரிய கஷ்டமாகவே நினைக்கவில்லை. ஒரு பொருளை கண்ணுக்கு முன் வைத்து பார்த்தால் அது பெரியதாக தெரியும், அதையே தள்ளி வைத்து பார்த்தால் சிறியதாக தெரியும். அப்படித்தான் என்னுடைய பிரச்சனைகளை நான் தள்ளிவைத்து பார்த்தேன். என்னுடைய கணவர், எனக்கு எந்த விதமான ஒத்துழைப்பையும் தரவில்லை. ஆனால், நான் என்னுடைய குழந்தைகளுக்கு என்னால் முடிந்தவரை நன்றாக படிக்க வைக்க வேண்டும், நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என்னிடம் இருந்ததே தவிர அவர்களை வளர்ப்பதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை என்று நடிகை கிருபா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

பட்ட கஷ்டம்: இன்றைய இளம் தம்பதிகளுக்கு நான் சொல்லிக் கொள்ளும் ஒரே விஷயம் என்னவென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சாதாரண பிரச்சனை. ஆனால், குழந்தை என்று வந்துவிட்ட பிறகு அவர்கள் தான் அந்த குழந்தைக்கு முழு பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் ஆண்கள் பெற்ற குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறார். பெண்கள் தான் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். அது அந்த குழந்தைக்கு மிகப்பெரிய வலியாகவே மாறிவிடும் இந்த வலியை குழந்தைக்கு தயவு செய்து கொடுக்காதீர்கள் என்று நடிகை கிருபா அந்தபேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











