Vanitha: தூக்கமாத்திரை சாப்பிட்டேன்.. அப்பா பதறி ஓடி வந்தார்.. வனிதா பேட்டி!
சென்னை : தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார், மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகளான வனிதா விஜயகுமார் தற்போது மிஸஸ் & மிஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் வனிதாவே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேற்று திரையிடங்களில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நடிகை வனிதா Galatta Tamil youtube சேனலுக்கு பல கேள்விகளுக்கு அதிரடியான பதிலை அளித்துள்ளார்.
கேள்வி: மிஸஸ் & மிஸ்டர் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஏன் ராபர்ட் மாஸ்டர் வரவில்லை?
பதில்: மிஸஸ் & மிஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போதே இருவருக்குள்ளும் சில முரண்பாடுகள் இருந்தது. ஏன் என்றால், நாங்கள் சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால், தற்போது அவர் பிஸியாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அவருக்கு என்று தனிப்பட்ட சில பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் அவர் என்னுடன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டாலும், எங்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது. இதனால் தான் இருவரும் சேர்ந்து இந்த படத்தில் நடித்தோம்.

கேள்வி: வனிதா மீண்டும் கர்ப்பம், தம்பி பாப்பா வேண்டுமென ஜோவிகா அடம்?
பதில்: அதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், எந்த பாப்பாவும் இதற்கு மேல் தேவை இல்லை.
கேள்வி: 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வனிதா, அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கா?
பதில்: அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இப்போது இல்லை. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இருந்தது. பிரச்சாரத்திற்கும் என்னை அழைத்தார்கள். ஆனால், இப்போது அரசியல் ஆர்வம் குறைந்து விட்டது. இப்போ, இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். அடுத்து என்ன படத்தை எடுக்கலாம் என்பதில் தான் என்னுடைய யோசனை இருக்கிறது.
கேள்வி: குடும்பத்துடன் நீங்கள் இயக்கிய படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்க?
பதில்: என்னுடைய குடும்பம் என்பது என்னுடைய நண்பர்கள் தான், ஒவ்வொருவரும் இந்த திரைப்படத்தில் ஏதோ ஒன்று எனக்காக செய்து இருக்கிறார்கள். அவர்கள், அனைவரும் என்னுடைய படத்தை பார்த்து பாராட்டினார்கள். அவர்கள் தான் என்னுடைய குடும்பம்.
கேள்வி: எட்டு வயதில் அம்மாவின் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தீர்களா? அது உண்மையா?
பதில்: அது உண்மைதான். ஆனால், நான் அதை தெரிந்து செய்தேனா... தெரியாமல் செய்தேனா என்று எனக்கே தெரியவில்லை. அந்த நேரத்தில் அமெரிக்காவில் நானும் அம்மாவும் இருந்தோம். அப்போது, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை ஏற்பட்டு, அப்பா, அம்மாவை விட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிட்டார். பிறகு தான் அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். அந்த நேரத்தில் அம்மா மன உளைச்சலில் இருந்ததால், தூங்குவதற்காக அவ்வப்போது தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதை நான் சாக்லேட் என நினைத்து சாப்பிட்டு விட்டேன். அம்மா பயந்து போய் அப்பாவிற்கு போன் செய்து நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அப்பா என்னை பார்ப்பதற்காக பதறி அடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு வந்தார். அவர்கள் இருவரும் சேர்வதற்கு நான் தான் காரணமாக இருந்தேன் என்று அந்த பேட்டியில் வனிதா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











