Don't Miss!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என் மகள் கல்யாணத்திற்கு வரேன்னு சொன்னார்.. விவேக் குறித்து எம் எஸ் பாஸ்கர் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் முக்கியமான ஒருவர் எம் எஸ் பாஸ்கர்.
நேற்று ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள மலேஷியா டூ அம்னீஷியா திரைப்படம் வெளியாகியுள்ளது.
என்ன கொடுமை இது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஒருவர் ஒருவராக இறக்குறாங்க.. கலங்கும் ரசிகர்கள்
அது குறித்தும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் பில்மி பீட் தமிழ் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் எம் எஸ் பாஸ்கர் .
மலேஷியா டூ அம்னீஷியா
ராதா மோகன் படங்களில் நடிப்பது குறித்து பேசிய எம் எஸ் பாஸ்கர், அழகிய தீயே படத்தில் தொடங்கிய எங்கள் நட்பு இன்று வரையில் நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் ராதா மோகன் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
குவிந்துள்ள விருதுகள்
எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் ஜல சமாதி எனும் திரைப்படம் விரைவில் OTTயில் வெளிவரவுள்ளது. அது குறித்து பேசிய
எம் எஸ் பாஸ்கர், இது தலைகூத்தல் சார்ந்த படம் எனவும், 50க்கும் மேற்பட்ட விருதுகளை இதுவரை வென்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மகளின் திருமணம்
விவேக்கின் மறைவு குறித்து பேசிய எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்க நேரில் சென்று விவேக்கை சந்தித்ததாகவும், விவேக்கும் திருமணத்திற்கு வருவதாக சொன்னதாகவும் கூறியுள்ளார் எனவும் அதன் பின் சில நாட்களில் விவேக்கின் மறைவு குறித்த செய்தி ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார். விவேக்குடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
தொடரும் மரணங்கள்
தொடர்ந்து பேசிய எம் எஸ் பாஸ்கர் நடிகர் நெல்லை சிவா உட்பட அவருக்கு நெருக்கமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்தார். இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் அனைவரும் அரசின் அறிவுரை படி வீட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம் என அறிவுறுத்தியுள்ளார்.