என் 6 வருடக் கனவு தான் ‘மட்டி‘… இயக்குனர் பிரகாபாலின் சுவாரசிய பேட்டி!
சென்னை : இந்தியாவில் முதன்முறையாக கரடுமுரடான மண் சாலை பந்தயத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள மட்டி திரைப்படம்.
இத்திரைப்படம் 6 மொழிகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
இப்படத்தின் இயக்குனர் பிரகாபால் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் , மட்டி திரைப்படம் குறித்து பல சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார்

மட்டி
பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மட்டி . இப்படத்தை டாக்டர் பிரகாபால் இயக்கியுள்ளார். இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. ஜி. எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

6 மொழிகளில்
தமிழ் , மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தமிழில் ஆர். பி. பாலா வசனம் எழுதியிருக்கிறார்.இத்திரைப்படம் குறித்து, இயக்குனர் பல சுவாரசியமானத் தகவலை பிலிமிபீட்டுக்கு பகிர்ந்துள்ளார்.

6 வருட போராட்டம்
2014ம் ஆண்டு இத்திரைப்படத்தின் கதை குறித்து யோசித்தேன். 6 வருடங்கள் கடந்து தற்போது இத்திரைப்படத்தை திரையில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். குறிப்பாக இப்படத்திற்கு மக்கள் அளித்துவரும் ஆதரவை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.

பெரிய ரிஸ்க்
மட்டி திரைப்படம் டிசம்பர் 31ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இதனை அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டும் என்றார் . தொடர்ந்து பேசிய அவர், முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா என்று பலர் என்னிடம் கேட்டனர். ஆடியன்சை திருப்திப்படுத்த வேண்டும் அதற்காக தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன் என்றார்.
சவாலாக இருந்தது
மட் ரோஸ் என்பதே ஒரு ரிஸ்கான கேம், இதை குறைந்த ஆட்கள் மட்டும்தான் செய்கிறார்கள் . இந்தியாவில் மட் ரோஸ் கேம் திரைப்படங்களே இல்லை என்பதால் இப்படம் எடுப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றார். மேலும், மட்டி திரைப்படம் குறித்து பல தகவலை பேட்டியில் கூறினார் இயக்குனர் பிரகாபால்.


Click it and Unblock the Notifications











