பள்ளி மாணவர்களாக நடிப்பது சவாலாக இருந்தது... முதல் நீ முடிவும் நீ பட நடிகை சுவாரசிய பேட்டி !

சென்னை : முதல் நீ முடிவும் நீ என்ற கவிதை நயமான திரைப்படத்தை இயக்குநர் தர்புகா சிவா கொடுத்து இருக்கிறார்.

Recommended Video

Mudhal nee Mudivum Nee | Purva Raghunath | Darbuka Siva செம்ம Interesting Character|Filmibeat Tamil

நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்த தர்புகா சிவா, முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி பலரின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் கேத்ரின் கதாபாத்திரத்தில் நடித்த பூர்வா ரகுநாத் ஒன்இந்தியா ஃபிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.

சந்தோஷமா இருக்கு

சந்தோஷமா இருக்கு

கேள்வி : முதல் நீ முடிவு நீ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?

பதில் : இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பாடத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தோம் என்றார். அதுமட்டும் இல்லாமல் யார் யார் எந்த கேரக்டரோ அந்த கதாபாத்திரத்தின் கதையை மட்டுமே சொன்னார். படம் முடிந்த பிறகுகூட கதை என்ன என்பது யாருக்கும் தெரியாது என்றார்.

சுத்தமா மேக்கப் போடல

சுத்தமா மேக்கப் போடல

கேள்வி : ஸ்கூல் யூனிஃபாம் போட்டு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில் : ஸ்கூல் போற பொண்ணா நடிக்கனும்னா அதற்காக, உருவத்தை மாற்றினால் மட்டும் போதாது, அதற்காக மென்டலாக தயாராக வேண்டும் அப்போது தான் அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்க முடியும். இதனால், கேத்ரின் எப்படி சிரிப்பா, எப்போ கோவப்படுவா என்பதை கேத்ரினா மாறி கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்தேன் என்றார். மேலும், அந்த வயதில் மாணவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் நடித்தோம், ஐப்ரோ த்ரெட்டிங் கூட பண்ணவில்லை என்றார்.

மனதில் பல வலி

மனதில் பல வலி

கேள்வி : கேரக்டரோட ஒன்றியே பேசுறீங்க உண்மையில் பூர்வா எப்படி ?

பதில் : பூர்வா அப்படி இல்லை, போல்டானா ஆளு, கோவமான ஆளு இரண்டையும் போட்டு நாம குழப்பிக் கொள்ளுவோம் ஆனால் கேத்ரின் அப்படி இல்லை அவளுக்குள் இருக்கும் வலியை மறைக்க அவள் அப்படி இருக்கிறாள் என்று கேத்ரின் கதாபாத்திரமாகவே பதிலளித்தார்.

படம் இயல்பாக இருந்தது

கேள்வி : தர்புகா சிவா கூட பணியாற்றியது எப்படி இருந்தது ?

பதில் : எதுவுமே செயற்கையாக இல்லாமல் எல்லாமே ரொம்ப இயல்பா இருந்தது, அது அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. கேத்ரின் கதாபாத்திரம் சவாலான கேரக்டர் அவளின் மனதில் பல வலி இருக்கும் ஆனால் அதை அந்த படத்தில் சொல்லமாட்டாங்க, அந்த வலி எனக்கு தெரியும் அதை எனக்கு மிகவும் அழகாக தர்புகா சிவா புரியவைத்தார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X