ஸ்கூல் போவது போல் ஷுட்டிங் போனோம்...முதல் நீ முடிவும் நீ ஹீரோ–ஹீரோயினின் ஓப்பன் டாக்

சென்னை : அறிமுக இயக்குனர் தர்புகா சிவா எழுதி, இயக்க உள்ள படம், முதல் நீ முடிவும் நீ. இவர் தான் இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 1999 ம் ஆண்டு பள்ளி பருவ காதலை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் நேற்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ரேகா கேரக்டரில் நடித்த மீதா ரகுநாத் மற்றும் வினோத் கேரக்டரில் நடித்த கிஷன் தாஸ் ஆகியோர் ஒன்இந்தியா ஃபிலிமிபீட்டிற்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை இங்கே பார்க்கலாம்.

Mudhal nee Mudivum nee hero Kishen das and heroine meetha ragunaths interview

* முதல் நீ முடிவும் நீ இந்த படத்தில் நடித்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லோருக்கும் முதல் படம் என்பதால் பயம் மற்றும் நம்பிக்கை இருந்தது. படம் பார்த்த எல்லோரும் மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் வாழ்க்கையில் நடந்ததை போல் உள்ளது என்றார்கள். அப்படி ஒரு உணர்வு வர வேண்டும் என்று தான் நாங்களும் இந்த படத்தை எடுத்தோம். சந்தோஷமாக உள்ளது. பர்னலாக கனெக்ட் ஆவதாக, வாழ்க்கையில் நடந்தாக கூறினார்கள். கேரக்டராக தான் பார்க்க முடிந்தது, யதார்த்தமாக இருந்தது என அனைவரும் கூறினார்கள்.

* ஸ்கூல் யூனிஃபாமில் இருந்த போது உங்களுக்கு உங்களின் பள்ளி நினைவுகள் வந்ததா

நல்லாவே நினைவுகள் வந்தது. இந்த படம் எடுக்கும் போது அப்போது தான் ஸ்கூல் முடித்து விட்டு வந்தேன். காலேஜ் சென்ற நான்கு வருட கேபிற்கு பிறகு ப்ளஸ் ஒன், ப்ளஸ் 2 திரும்பி வந்த போல் இருந்தது. இது மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. நாங்க யூனிஃபார்ம் போட்டு தான் செட்டிற்கே செல்வோம். ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு ஆட்டோ பிடித்து போகும் போது ஸ்கூலுக்கு போவது போல் தான் இருந்தது. 6 மணிக்கு கூப்பிடுவாங்க, 7 மணிக்கு அங்க இருக்கனும். ஸ்நாக்ஸ் பிரேக் இருக்கும், லஞ்ச் பிரேக் இருக்கும். 6 மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவோம். நாங்க பேசுறது கூட ஸ்கூல் பசங்க மாதிரி தான் இருக்கும். ஒரு ஸ்டேஜீற்கு பிறகு எல்லாம் ஸ்கூல் பசங்க மாதிரி மாறிடும்.

Mudhal nee Mudivum nee hero Kishen das and heroine meetha ragunaths interview

* ஒரு ஹீரோவாக மாறி இருக்கீங்க. உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்ன சொல்கிறார்கள்

படம் எப்படி வந்திருக்கிறது என்பதை தாண்டி நன்றாக வந்திருக்கு. ஒரு யூட்யூப் ஆரம்பித்து, இப்போ இங்க வந்திருக்கிறத சுற்றி இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவங்களுக்கு சந்தோஷமாக தான் உள்ளது.

* ஊட்டியில் படுகா இன மக்கள் உங்களின் நடிப்பை பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்

எல்லோரும் பாசிடிவ்வாக, சந்தோஷமாக தான் சொன்னார்கள். நிறைய பேருக்கு படுகர்கள் என்றால் யார் என்றே தெரியாது. ஊட்டியில் எங்களின் கலாச்சாரம் வித்தியாசமானது. பலருக்கும் தற்போது அதை பற்றி தெரிந்திருப்பது சந்தோஷமாக உள்ளது.

* ஃபஸ்ட் ஆஃபில் ஃபேர்வெல் பார்டி, கிளாஸ்ரூம், சின்ன சின்ன விஷயங்களில் உங்களை கவர்ந்த விஷயம் எது. 1999 ஆண்டு நினைவுகளுக்குள் மொத்தமாக போனது போல் எது உங்களை ஃபீல் பண்ண வைத்தது

புதிதை பாடல் எடுத்த போது எனக்கு அப்படி தோன்றியது. புதிதை பாடல் சரியாக அந்த கால கட்டத்தில் நடந்ததை போல் தோன்றியது. ஸ்பென்சர் பிளாசா போறது, ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவது, நாங்கள் போட்டிருக்கும் டிரெசும் அப்படி தான். எனக்கு இப்போ ஷுட் பண்ணுவதை போல் இல்லை. 1999 க்கு போய் ஷுட் பண்ணியிருந்தா எப்படி இருக்கும். அது போல் தான் தோன்றியது.

ஸ்கூல் முடித்து விட்டு சுத்துற டைம் அப்படி இருந்தது. அப்போதெல்லாம் போன் கிடையாது இல்லையாசெல்போன் இல்லாத உலகம் போல் இருந்தது. அதை தான் நான் மிகவும் என்ஜாய் பண்ணினேன். போனில் கூப்பிட்டெல்லாம் பேச முடியாது. முன்பே அனைத்தையும் பிளான் பண்ணுவோம்.

Mudhal nee Mudivum nee hero Kishen das and heroine meetha ragunaths interview

* ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒரே இயர் போனை இருவரும் போட்டு கேட்ட தருணம் எல்லாம் உண்டா

அப்படி எதுவும் இல்லை. ரிகர்சல் சமயத்தில் அப்படி செய்திருக்கிறோம். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. முதல் படத்திலேயே இப்படி கதை, இப்படி கெமிஸ்ட்ரி இருக்கும் போது எங்கள் இருவருக்குமே தெரியும் எப்போ, எங்கு மற்றவருக்கு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என்று. ரொமான்ஸ் சீன் ஷுட் பண்ணும் போது எல்லோரும் இருப்பார்கள். அது கூச்சமாக இருக்கும். சில நேரங்களில் பார்க்கில் ஷுட் செய்வார்கள். ஆட்கள் எல்லோரும் கூடி விடுவார்கள். அது ஒரு மாதிரி இருக்கும்.

* கேன்டீன் பக்கம் போகும் போதெல்லாம் கோபப்படுகிறாரே. அது ஏன்

ஸ்கூல் படிக்கும் போது அது தான பெரிய விஷயமா இருக்கும். இப்போது அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அப்போது அது தானே பெரிதாக இருக்கும். இன்னொரு பொண்ணுடன் பழகும் போது அது வழக்கமாக நடப்பது தானே.

Mudhal nee Mudivum nee hero Kishen das and heroine meetha ragunaths interview

* டைரக்டர் கிட்ட நீங்க எடுத்துக்கிட்ட விஷயம் என்ன

மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் கேரக்டராக ஒன்றிப் போய் நடிக்க வேண்டும். அது தான் நன்றாக இருக்கும் என்பார். அது ஷுட்டிங்கின் போது புரிந்ததா என தெரியவில்லை. ஆனால் ஷுட்டிங் முடிந்ததும் , அடுத்த ப்ராஜெக்ட் செய்யும் போது உதவியது. யாராக இருந்தாலும் அவர் மரியாதை கொடுப்பார். ஒரு சீன் எடுக்கும் போது இது உங்களுக்கு கம்ஃபர்டபிளாக இருக்கா என கேட்பார். அதுவே ஒரு நடிகருக்கு மிகப் பெரிய விஷயம். 13 பேருக்கு முதல் படம் எனும் போது அனைவருக்கு செம பயம் இருந்தது. ஆனால் அது இல்லாமல் கம்ஃபர்டபிளாக வைத்திருந்தார். அவங்களுக்கும் அது கம்ஃபர்டபிளாக இருக்க வேண்டும். படத்திற்கும் அது தேவையானதாக இருக்க வேண்டும் என நினைப்பார்.

நிறைய ரிகர்சல் பண்ண வேண்டும் என சொன்னதால் ஆன் தி ஸ்பார்ட் எங்களுக்கு பிரஷரே இல்லை. ஆக்ஷன் சொன்னதும், ஒரு டிராமா மாதிரி செய்வோம். அதனால் எங்களுக்கு ஸ்டிரெஸ் இல்லை என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X