»   »  மனம் திறக்கும் மும்தாஜ்

மனம் திறக்கும் மும்தாஜ்

Subscribe to Oneindia Tamil

ஆடைகளை அவிழ்த்த பிறகு இருப்பதை விட ஆடையில்தான் பெண்கள் அழகாகஇருக்கிறார்கள் என்று தத்துவத்தைக் கக்குகிறார் மலமல மும்தாஜ்.

மும்தாஜ் ஜம்மென்று இருக்கிறார். இடையில் கொஞ்சம் போல எகிறிய உடம்பைஓரளவுக்குக் கட்டுப்படுத்தி கட்டுமஸ்தாக காணப்படுகிறார்.

வீராசாமியில் இவரது வேடத்திற்கு டி.ராஜேந்தர் கொடுத்துள்ள முக்கியத்துவமும்,ஏகப்பட்ட செலவு செய்து எடுக்கப்பட்ட பால் (குளியல்) ஆட்டமும் மும்தாஜைசந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

இந்தப் படம் வரட்டும், மறுபடியும் ஒரு ரவுண்டு அடிக்கிறேனா, இல்லையான்னுபாருங்க என்று படு தெம்பாக பேசுகிறார் மும்ஸ்.

வீராசாமி நம்பிக்கையில் படு கலகலப்பாக காணப்பட்ட மும்ஸிடம்,நீங்கள் இதுவரை நடித்துள்ள படங்களை திரும்பிப் பார்த்தீர்களா, எப்படிஉணர்கிறீர்கள் என்று நினைவுகளை மலர விட்டோம்.

அதை ஏன் கேட்கிறீர்கள். இப்போது நினைத்தால் கூட நான் ஆடிய சில பாடல்காட்சிகளை பார்த்தால் ரொம்ப அவமானமாக இருக்கு. இப்படிக் கூட ஆடினேனாஎன்று வெட்கமாகப் போய் விடுகிறது.

குஷி படத்தில் நான் ஆடிய கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டுதான் எனக்குப் புகழைத்தந்தது. ஆனால் அதன் பிறகு வந்த வாய்ப்புகள் எல்லாமே அதே பாணியிலானகுத்துப் பாட்டுக்களாகவே போய் விட்டன.

குஷி பாட்டு வந்தபோது எனக்கு வயசு 16தான். அந்தச் சின்ன வயதிலேயே கிளாமரில்இறங்கி விட்டேன். ஒரு முறை ஆடையைக் குறைத்து விட்டால், பிறகு வெட்கப்பட்டுஎன்ன ஆகப் போகிறது? வெட்கத்திற்கு அங்கென்ன வேலை?

தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நான் ஆடையைக்ை குறைத்து நடிப்பதையே,ஆடுவதையே விரும்பினார்கள். நேயர்கள் விருப்பத்தை நான் நிறைவேற்றிவைத்தேன் என்று சோகமாக ஃபீல் ஆனார் மும்ஸ்.

சட்டென்று இறுக்கத்தைக் குறைத்துக் கொண்டு டிராக் மாறிய மும்தாஜ், ஒருபெண்ணை ஆடையை அவிழ்த்து விட்டுப் பார்த்தால் தெரியும் அழகை விட,ஆடையில்தான் அவள் அழகாக இருப்பாள்.

நான் மும்பையைச் சேர்ந்தவள் என்றாலும் என்னை ரொம்பவும் கவர்ந்தவர்கள்தமிழ்நாட்டுப் பெண்கள்தான். சேலையிலும், சுடிதாரிலும் எவ்வளவு அழகாகஇருக்கிறார்கள்? இவர்கள்தான் நம் பண்பாட்டை சரியாக பிரதிபலிப்பவர்கள் என்றுசந்தோஷமாகிறார்.

மும்ஸ் ஆடிய கட்டிப்புடி ரசிகர்களுக்குப் பிடிக்கும். மும்ஸுக்கு எந்தப் பாட்டுப்பிடிக்கும்? எனக்கு கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் மூன்றாம் பிறை படத்தில்வந்ததே, கண்ணே கலைமானே பாட்டு, அதுதான் ரொம்பப் பிடிக்கும். நான்ரொம்பவும் ரசித்துக் கேட்ட, பார்த்த பாடல் அது. அதேபோல கமலையும்,ஸ்ரீதேவியையும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்று சிலாகித்தார்.

அடடா, பூ மலைக்குள் இப்படி ஒரு ஃபீல் அலையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil