twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்ஸின் ரவுசு! "எனக்கு இன்னும் 18 வயசு கூட ஆகலை, ஸோ, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுதான்திருமணம் என்று கூறி பெரிய குண்டாகப் பார்த்து நடு மண்டையில் நச்சென்றுபோடுகிறார் மும்தாஜ்.ரொம்ப நாளாச்சேன்னு அவரைப் பார்க்கப் போனபோதுதான் இந்த குண்டைப்போட்டார் மும்ஸ். என்ன மேடம் கிளாமரில் கில்லியாக துள்ளி விளையாடினீங்க,இப்போ ஆளைக் காணோமே என்று வாயை கிளியபோது, சும்மா கப்சாவிடாதீங்கப்பா, இப்பவும் நான் பிசிதான். ஜெர்ரி, வெடக்கோழி, பட்டாசு, அவள் அப்படித்தான் இப்படி என்னோட கால்ஷீட் புக்ஃபுல்லாகிக் கிடக்கிறது என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டார் மும்தாஜ்(வீராசாமியை விட்டுட்டீங்கோ!). பட்டாசு படத்தில் சூப்பர் கெட்டப்பில் விவேக்குக்கு ஜோடியாக நடிக்கிறாராம் மும்ஸ்.உங்களுக்கு கிளாமரைத் தவிர வேறு ஒன்னுமே வராதா என்று மும்ஸை கேட்டதுதான்தாமதமம், கோபத்தில் முகம் ரோசாப்பூ போல செவசெவன்னு மாறி விட்டது. இதென்ன கேள்வி?நான் 4 படங்களில்தான் ஒத்தைப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறேன்.குஷியில் நான் காமெடிதான் செய்தேன். ஆனால் கட்டிப் புடி பாட்டுதான் ஹிட் ஆனது.என்னைக் கவனித்த ரசிகர்கள், எனது காமெடியை ரசிக்க மறந்து விட்டனர். அப்புறம், சாக்லெட் படத்தில் கூட நல்ல கேரக்டர்தான். ஆனால் யாரு அதைப்பார்த்தாங்க. "மல மல பாட்டைத்தான் ரசித்தார்கள் (ஹி..ஹி.. ரொம்ப நல்லாஆடுனீங்கோ, அதுல!). அதனால்தான் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கொஞ்சம் கேப்விட்டு நிறுத்தினார் மும்தாஜ். என்ன பண்ணப் போறேள்? பதற்றத்துடன் நாம் ..இனிமேல் கிளாமர் ரோல்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட நல்ல ரோல்களாகபார்த்து நடிக்கப் போகிறேன். தேவைப்பட்டால்தான் இனிமேல் கிளாமர் என்றார்மும்தாஜ். நமக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. மலை இல்லாமல் திருப்பதியா,பஞ்சாமிர்தம் இல்லாத பழனியா, கிளாமர் இல்லாத மும்தாஜா என்று என்னென்னவோமனதில் ஓட பதறிப் போய், என்ன இப்படி சொல்லிட்டீங்க, ரசிகர்கள் ஏமாந்து விடமாட்டார்களா என்று கேட்க, அப்படியெல்லாம் இல்லை. எனது நடிப்பையும் ரசிகர்கள் விரும்புவார்கள். நான் கிளாமரே கிடையாது என்றுசொல்லவில்லையே, தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சம் கண்டிப்பாக உண்டுஎன்று சொல்லி வயிற்றில் "பீர் ஊற்றினார். இப்படியே எத்தனை நாளைக்கு சிங்கிளாக இருப்பீர்கள், கண்ணாலம், கிண்ணாலம்..?என்று டாப்பிக்கை மாற்றியபோது, எனக்கு என்ன வயதாகி விட்டது என்றுநினைக்கிறீர்கள். ஓட்டுப் போடுகிற வயசைக் கூட நான் இன்னும் தொடலை தெரியுமா? (அடங்கொப்புரானே! மெய்யாலுமா?) அதுக்குள்ள கல்யாணம் பத்தியெல்லாம் பேசவந்துட்டீங்க. அதெல்லாம் இன்னும் அஞ்சாறு வருஷம் போகனும் என்று படு கூலாகமுடித்தார் மும்தாஜ். மும்ஸுக்கு ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு!

    By Staff
    |

    "எனக்கு இன்னும் 18 வயசு கூட ஆகலை, ஸோ, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுதான்திருமணம் என்று கூறி பெரிய குண்டாகப் பார்த்து நடு மண்டையில் நச்சென்றுபோடுகிறார் மும்தாஜ்.

    ரொம்ப நாளாச்சேன்னு அவரைப் பார்க்கப் போனபோதுதான் இந்த குண்டைப்போட்டார் மும்ஸ். என்ன மேடம் கிளாமரில் கில்லியாக துள்ளி விளையாடினீங்க,இப்போ ஆளைக் காணோமே என்று வாயை கிளியபோது, சும்மா கப்சாவிடாதீங்கப்பா, இப்பவும் நான் பிசிதான்.

    ஜெர்ரி, வெடக்கோழி, பட்டாசு, அவள் அப்படித்தான் இப்படி என்னோட கால்ஷீட் புக்ஃபுல்லாகிக் கிடக்கிறது என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டார் மும்தாஜ்(வீராசாமியை விட்டுட்டீங்கோ!).

    பட்டாசு படத்தில் சூப்பர் கெட்டப்பில் விவேக்குக்கு ஜோடியாக நடிக்கிறாராம் மும்ஸ்.உங்களுக்கு கிளாமரைத் தவிர வேறு ஒன்னுமே வராதா என்று மும்ஸை கேட்டதுதான்தாமதமம்,


    கோபத்தில் முகம் ரோசாப்பூ போல செவசெவன்னு மாறி விட்டது. இதென்ன கேள்வி?நான் 4 படங்களில்தான் ஒத்தைப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறேன்.

    குஷியில் நான் காமெடிதான் செய்தேன். ஆனால் கட்டிப் புடி பாட்டுதான் ஹிட் ஆனது.என்னைக் கவனித்த ரசிகர்கள், எனது காமெடியை ரசிக்க மறந்து விட்டனர்.

    அப்புறம், சாக்லெட் படத்தில் கூட நல்ல கேரக்டர்தான். ஆனால் யாரு அதைப்பார்த்தாங்க. "மல மல பாட்டைத்தான் ரசித்தார்கள் (ஹி..ஹி.. ரொம்ப நல்லாஆடுனீங்கோ, அதுல!).

    அதனால்தான் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கொஞ்சம் கேப்விட்டு நிறுத்தினார் மும்தாஜ். என்ன பண்ணப் போறேள்? பதற்றத்துடன் நாம் ..இனிமேல் கிளாமர் ரோல்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட நல்ல ரோல்களாகபார்த்து நடிக்கப் போகிறேன். தேவைப்பட்டால்தான் இனிமேல் கிளாமர் என்றார்மும்தாஜ்.


    நமக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. மலை இல்லாமல் திருப்பதியா,பஞ்சாமிர்தம் இல்லாத பழனியா, கிளாமர் இல்லாத மும்தாஜா என்று என்னென்னவோமனதில் ஓட பதறிப் போய், என்ன இப்படி சொல்லிட்டீங்க, ரசிகர்கள் ஏமாந்து விடமாட்டார்களா என்று கேட்க, அப்படியெல்லாம் இல்லை.

    எனது நடிப்பையும் ரசிகர்கள் விரும்புவார்கள். நான் கிளாமரே கிடையாது என்றுசொல்லவில்லையே, தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சம் கண்டிப்பாக உண்டுஎன்று சொல்லி வயிற்றில் "பீர் ஊற்றினார்.

    இப்படியே எத்தனை நாளைக்கு சிங்கிளாக இருப்பீர்கள், கண்ணாலம், கிண்ணாலம்..?என்று டாப்பிக்கை மாற்றியபோது, எனக்கு என்ன வயதாகி விட்டது என்றுநினைக்கிறீர்கள். ஓட்டுப் போடுகிற வயசைக் கூட நான் இன்னும் தொடலை தெரியுமா? (அடங்கொப்புரானே! மெய்யாலுமா?) அதுக்குள்ள கல்யாணம் பத்தியெல்லாம் பேசவந்துட்டீங்க. அதெல்லாம் இன்னும் அஞ்சாறு வருஷம் போகனும் என்று படு கூலாக

    முடித்தார் மும்தாஜ்.

    மும்ஸுக்கு ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X