சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.. கோயம்பேட்டில் மூட்டை தூக்கினேன்.. முனீஷ்காந்த் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், சினிமாவில் ஜெயிப்பதற்கான தான் பட்ட கஷ்டத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
வத்தலகுண்டு பக்கம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராமதாஸ். இவர் சினிமாவிற்காக தனது பெயரை முனீஸ்காந்த் என மாற்றிக்கொண்டார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடித்து நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இப்படி தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன், பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார்.

முனீஸ்காந்த்: இவர் அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் ரஜினி,கமல் அவர்களை பிடிக்கும். ஆனால், சினிமாவை தேர்ந்து எடுத்த பிறகு எனக்கு நாசர் மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். அவர் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிப்பார் அதேபோல நானும் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கு முக்கிய காரணம், சாகுற வரைக்கும் சினிமா சோறு சாப்பிட வேண்டும் அதற்கு எல்லாம் கதாபாத்திரத்திலும் நடித்தால் முடியும்.
மூட்டை தூக்கினேன்: சினிமா வாய்ப்புக்காக ஆரம்பத்தில் பயங்கரமாக கஷ்டப்பட்டேன், சாப்பாட்டு செலவுக்கு கூட காசு இருக்காது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி இருக்கிறேன். நாலு நாள் நடிக்க போகணும்னா எல்லா வேலையும் செய்யனும். அதனாலேயே அவர்கள் கொடுக்கும் எந்த வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் செய்தேன். ஆரம்பத்தில் ஜூனியர் நடிகராக இருந்தேன். தாடி எல்லாம் வளர்த்து வில்லனாகவும் ட்ரை பண்ணி இருக்கிறேன். பின் நாளை இயக்குனரின் முண்டாசுப்பட்டி குறும்படத்தில் நடித்தேன். அதற்குப்பிறகுதான் என்னுடைய வாழ்க்கையே மாறியது.
நம்பவே முடியல: முண்டாசு பட்டியில் நான் வெட்டியான் கேரக்டருக்கு வாய்ப்பு கேட்டு தான் போனேன். என்னிடம் ஸ்கிரிப்டை கொடுத்து படிக்க சொன்னார். நானும் படித்துமுடித்துவிட்டு உட்கார்ந்து இருந்தேன். அப்போது ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து, 80ஸ் காலத்து டிரசை வாங்கிட்டு வாங்க என்றார். அடுத்த நான் வாங்கிக்கொண்டு போனேன். அப்போதுதான் முனிஸ்காந்த் நீங்க தான் என்றார். என்னால் நம்பவே முடியல என்று முனீஸ்காந்த் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











