சைந்தவியை பிரிந்தாலும்.. என்னைக்கும் மனதில் இருப்பார்.. மனம் திறந்து பேசிய ஜிவி பிரகாஷ்!

சென்னை: மு.மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கதாநாயகி தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் பிளாக் மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரே ஒரு பாடலுக்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்து.

பிளாக் மெயில் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், Behindwoods TV யூடியூப் சேனலுக்கு படம் குறித்து பேசினார். பிளாக் மெயில் திரைப்படம் நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தித்து இருப்போம். அதைத்தான் இந்த படத்தில் இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். படத்தின் கதை கேட்டதும், எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், இந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டேன். நம்மை பற்றி தெரியாதவர்கள் யாரும் நமக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த, நாம் உயிராக நினைத்த நண்பர் நமக்கு துரோகம் செய்வான், அவன் தான் நமக்கு பெரிய எதிரியாகவே இருப்பான் என்பதைத் தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.

gv prakash saindhavi black mail
Photo Credit:

ஜிவி பிரகாஷ்: அந்த வருடமாக இந்த உலகத்தில் இருக்கிறோம் என்றால், நிச்சயம் பல துரோகத்தை நாம் சந்தித்து கடந்து தான் வந்து இருப்போம். ஆனால், அந்த துரோகம், நாம் உயிராக நினைத்த நண்பரிடம் இருந்தோ, உறவிடம் இருந்தோ, யாரிடம் இருந்து வருகிறது என்பதை பொருத்துத்தான் அதன் வலி இருக்கும். அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்து விட்டதால், நாம நம்ம வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டேன் என்றார்.

என்றைக்கும் மனதில்: அண்மையில், லண்டனில் ஜிவி பிரகாஷ், இசைக் கச்சேரி நடத்தினார். அதில்,பல இசைக் கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள் கலந்து கொண்டார்கள். அதில் பாடகியும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் முன்னாள் மனைவியுமான சைந்தவி கலந்து கொண்டு பாடினார். அப்போது, ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்துக் சிரித்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜிவி, சைந்தவியை எனக்கு 2001ல் இருந்து தெரியும், அவர் என் பள்ளி தோழி என்பதால், அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, கௌரவத்தை நான் கொடுக்கிறேன். அவர் ஒரு திறமையான பாடகி அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நான் எப்போதும் கொடுப்பேன்.

நாங்கள் இருவரும் தொழிலில் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை, நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம் என்பதால், எங்களால் இணைந்து பணியாற்ற முடிகிறது. இருவரும் பிரிவு இருந்த போதிலும், தொழிலில் சக கலைஞருக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமே அதை இருவரும் எப்போதும் கொடுத்துக் கொள்வோம் என்று ஜிவி பிரகாஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இருவரும் ஒரே காரி விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X