ட்யூன்லாம் அப்படியே திருடுறாங்க.. எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னது சரிதான்.. இசையமைப்பாளர் பரணி ஆதங்கம்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் பற்றி சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது சரியான பேச்சு தான் என்றும் அந்த படத்தின் இரண்டாம் பாதி கதை மட்டுமல்ல, அந்த படத்தில் பாடல் திருட்டு சர்ச்சையும் எழுந்தது குறிப்பிடத்தக்கது என இசையமைப்பாளர் பரணி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
நல்ல கதைகளையோ, நல்ல இசையையோ யாரும் இப்போதெல்லாம் கேட்பதில்லை என்றும் ஹீரோ கால்ஷீட் கிடைத்து விட்டால் ஏதோ ஒன்றை கிண்டி கொடுத்து விடுகின்றனர். மார்க்கெட் இருப்பவர்கள் ஏமாற்றினாலும், பரவாயில்லை அவர்கள் பின்னாடியே போவோம் என்று தான் சினிமா உலகம் ஓடிக் கொண்டிருக்கு என வெளுத்து வாங்கி விட்டார் பரணி.

யாரு இந்த பரணி?: எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா நடித்து வெளியான பெரியண்ணா படத்தில் விஜய்யை வைத்து "நான் தம்மடிக்கிற ஸ்டைல்ல பார்த்து தனலட்சுமி விரும்பிச்சு" என்கிற பாடலை போட்டவர் இவர் தான். குணால் மற்றும் மோனல் நடிப்பில் வெளியான பார்வை ஒன்றே போதுமே படத்தில் இவர் மிகப்பெரிய ஹிட் ஆல்பத்தை கொடுத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற "துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்" பாடல் இப்போது வரைக்கும் இளைஞர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது. சுந்தரா டிராவல்ஸ், ஸ்டைல், திருடிய இதயத்தை, மெய்ப்பட செய் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ட்யூன்லாம் திருடுறாங்க: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடிப்பில் வெளியான லியோ படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற ஆர்டினரி பெர்சன் பாடல் அப்படியே Peaky Blinders வெப்தொடருக்காக இசையமைப்பாளர் ஓட்னிகா போட்ட பாடலை அப்படியே சுட்டு அனிருத் இசையமைத்ததாக சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் பேசிய பரணி பல இளம் இசையமைப்பாளர்கள் அப்படியே வெளிநாடுகளில் போடப்படும் பாடல்கள், ஆல்பங்களில் இருந்து அப்படியே ட்யூனை திருடி போட்டு இங்கே நம்பர் ஒன் இசையமைப்பாளர்களாக வெட்கமே இல்லாமல் வலம் வருகின்றன்ர் எனக் கூறியுள்ளார்.

இயக்குநர்களுக்கு இசை ஞானம் இல்லை: முன்பெல்லாம் இசையமைப்பாளர்களிடம் உட்கார்ந்து இயக்குநர்கள் ட்யூன் கேட்டு வாங்குவார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஃபைல் அனுப்பிடுங்க டான்ஸ் மாஸ்டர் பாட்டு பண்ணிடுவாருன்னு ஈஸியா சொல்லிடுறாங்க, ஒரு படத்துக்கு ஒரு குத்துப்பாட்டு ஹிட் ஆனால், போதும் என்கிற மனநிலையில் தான் இயக்குநர்கள் உள்ளார்கள் என்றும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











