10 விஜய் படங்களுக்கு நோ சொல்லிட்டேன்.. ஹாரீஸ் மாம்ஸ்க்கு தைரியம்தான்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமா உலகில் உலகத் தரம் வாய்ந்த ஸ்டுடியோ வைத்துள்ள இசையமைப்பாளர் என்றால் அது ஹாரீஸ் ஜெயராஜ் தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளது. அவரது இசை மற்ற இசையமைப்பாளர்கள் விட வித்தியாசமாக இருப்பது மட்டும் இல்லாமல் தனித்துவமாக இருப்பதாலோ என்னவோ, இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரை அவரது ரசிகர்கள் ஹாரீஸ் மாம்ஸ் என அழைக்கின்றார்கள். அப்படி இருக்கும்போது, சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹாரீஸ் ஜெயராஜ் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, எஸ்.ஏ. ராஜ்குமார் என பலரும் ஜாம்பவான்களாக உயர்ந்து நின்று கொண்டு இருக்கும் போது, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது இசையால் திரும்பிப் பார்க்க வைத்தவர். அந்தப் படம்தான் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம் என யாராவது கூறினால், பலரும் அதனை ஏற்க மறுத்தார்கள். காரணம் அவரது இசையில் அந்த அளவிற்கு தெளிவும் ரசிகர்களை வசியப்படுத்தும் திறனும் இருந்தது.

Music Director Harris Jayaraj Interview About He Says No To Vijay Films

ஹாரீஸ் ஜெயராஜ் : அதன் பின்னர் பல இயக்குநர்களுடன் ஹாரீஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி உள்ளார். ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் என்றாலே அவர்களது கூட்டணிக்காக பெரும்பாலான ரசிகர்கள் பட்டாளம் இப்போதும் உள்ளார்கள். இவர்களது கூட்டணியில் வெளியான படங்களான மின்னலே, காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என அனைத்துமே ஆல்பம் ஹிட்.

கௌதம் வாசுதேவ் மேனன்: இவர்கள் கூட்டணியில் அடுத்து வெளியாக உள்ள படமாக துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ஆல்பம் செம ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசை என்றாலே, ரசிகர்களுக்கு தனி அலாதி வந்து விடுகிறது. காரணம் அவரது மெனக்கெடல் ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படும். அப்படி இருக்கும்போது, ஹாரீஸ் ஜெயராஜ் தான் வளர்ந்து வந்த காலத்தில் விஜய்யின் 10 படங்களுக்கு தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

Music Director Harris Jayaraj Interview About He Says No To Vijay Films

விஜய்: இது தொடர்பாக அவர் பேசும்போது, " நான், விஜய்யின் 10 படங்களுக்கு தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டு வந்தேன். 11வது படத்தில் தான், நான் கமிட் ஆனேன். காரணம் என்னால் ஒரே நேரத்தில் பல படங்களில் கவனம் செலுத்த முடியாது. நான் இசையை நெருக்கடியில் உண்டாக்க விரும்பவில்லை. அந்த படத்தில் ஒரு பாடல் கொடுக்க வேண்டும், மற்றொரு படத்திற்கு இன்னொரு பாடல் கொடுக்க வேண்டும். ஒருவர் காத்துக் கொண்டு இருக்கிறார், அவருக்கு பாடல் கொடுக்க வேண்டும் என நான் கமிட்மெண்ட் கொடுத்துவிட்டால் அது தண்டனை போல் ஆகிவிடும். அது என்னால் முடியாது" எனக் கூறியுள்ளார். அவரது பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தில் தான் விஜய் உடன் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் அவர் விஜய்யுடன் மீண்டும் இணையவில்லை.

Music Director Harris Jayaraj Interview About He Says No To Vijay Films

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X