twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive : விஸ்வாசம் படத்தின் மையக்கருவே ‘கண்ணான கண்ணே’ பாடல் தான்: இமான் பேட்டி

    விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்தது குறித்து இசையமைப்பாளர் டி.இமான் ஒன்இந்தியாவிடம் பகிர்ந்துகொண்டார்.

    |

    சென்னை : தனது இசை கடவுள் போட்ட பிச்சை என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் டி.இமான். தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் இவர் இசையில் வெளியான விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் செம ஹிட் பாடலாகியுள்ளது. மகளை பெற்ற அப்பாக்களின் லேட்டேஸ்ட் ரிங்டோன் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இந்த பாடல் தான். படத்திலும் இந்த பாடல் இடம் பெறும் காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன.

    இந்நிலையில், ஒன்இந்தியாவுக்காக இசையமைப்பாளர் டி.இமானை சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து,

    கண்ணான கண்ணே:

    கண்ணான கண்ணே:

    " விஸ்வாசம் படத்தின் மையக்கருவே கண்ணான கண்ணே பாடலில் தான் இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவுகளை பற்றி பேசக்கூடிய படம். அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்லக்கூடிய பாடலாகவும் இருக்கிறது.

    அனைத்து அம்சங்களும்..

    அனைத்து அம்சங்களும்..

    இந்த பாடலை தனியாக கேட்கும்போதும் நன்றாக இருக்க வேண்டும். திரும்பத் திரும்பக் கேட்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் படத்திலும் அது பொருந்த வேண்டும். இத்தனை அம்சங்களும் நிறைந்த பாடலாக அது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கண்ணான கண்ணே பாடலுக்கு இசையமைத்தேன்.

    எனக்குப் பிடித்தது:

    எனக்குப் பிடித்தது:

    இயக்குனர் சிவாவை பொறுத்த வரையில், இந்த படத்தில் பாடல்களை எல்லாம் பின்னணி இசையைப் போல் பயன்படுத்தி இருந்தார். அது தான் படத்திற்கும், பாடலுக்கும் வலு சேர்த்தது. அது தான் எனக்கு மிகவும் பிடித்த அம்சமாக இருந்தது. அதோபோல் பாடல்களை கதையை நகர்த்துவதற்கான ஆயுதமாக சிவா பயன்படுத்தியது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.

    வெற்றி:

    வெற்றி:

    விஸ்வாசம் படத்தை பொறுத்த வரை இது ஒரு கமர்ஷியல் படமாகவும், அதேசமயம் நடிப்புக்கு முக்கியத்தும் உள்ள படமாகவும் அமைந்திருக்கிறது. அஜித்தை ரசிப்பதற்கு தேவையான ஆரவாரமான பாடலும் படத்தில் இருக்கும். அதேபோல், கதையை நகர்த்துவதற்கு தேவையான பாடலும் இருக்கும். இதற்காக நாங்கள் எடுத்த முயற்சியின் வெற்றி தான் ரசிகர்களின் பாராட்டாக வந்துள்ளது.

    பாராட்டு:

    பாராட்டு:

    அஜித் மாதிரி ஒரு மாஸான ஹீரோ இப்படி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தூக்குதுரை கதாபாத்திரமாகவே மாறி நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஏனென்றால், அவர் பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. சும்மா திரையில் தோன்றினாலே போதுமானது. ஆனால் அதையும் தாண்டி அவர் இந்தளவுக்கு மெனக்கெட்டு நடித்திருப்பது பெரிய விஷயம். எனவே நாமும் நம்முடைய பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து தான் இசையமைத்தேன்.

    கடவுள் கொடுத்த பிச்சை:

    கடவுள் கொடுத்த பிச்சை:

    என்னோட பாடல்கள் ஹிட்டாவதற்கு காரணம் இறையருள் தான். இறைவன் கொடுத்த பிச்சை தான் எனது இசை. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பாடல் அடையாளமாக இருக்க வேண்டும் என நினைத்து தான் இசையமைப்பேன்.

    வெற்றி ரகசியம்:

    வெற்றி ரகசியம்:

    ஒரு சில பாடல்கள் காலத்துக்கும் நிற்கும். அந்த படத்தை நினைக்கும் போது அந்த பாடலும் நினைவுக்கு வரும். ஒரு பாடலை நினைக்கும் போது அந்த படத்தில் காட்சிகள் நினைவுக்கு வரும். எழுபதுகளில் சினிமா பாடல்கள் அப்படி தான் இருந்தது. அதை நினைத்து தான் வேலை செய்கிறேன்" என இவ்வாறு அவர் கூறினார்.

    Read more about: interview பேட்டி
    English summary
    While speaking to Oneindia, music director D.Iman said that his music is god's gift.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X