twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவிற்கு இசையை தவிர வேறொன்றும் தெரியாது... லிடியன் நாதஸ்வரம்

    |

    சென்னை: இளையராஜாவிடம் நான் படிப்பது எனது வாழ்நாள் சாதனையாகயும், மிகப்பெரிய விருதாகவும் கருதுவதாக லிடியன் நாதஸ்வரம் கூறினார்.

    Recommended Video

    Lydian Nadhaswaram |4 வயசுல இருந்து Music பண்றேன் | Filmibeat Tamil

    லிடியன் சிறு வயது முதல் பல விதமான இசை கருவிகளை வாசித்து வருகிறார்.இவரது இசையை இசைஞானி பல முறை பாராட்டி,தட்டி கொடுத்து மிகவும் அன்பு காட்டினார் .

    சிறுவயதில் பல விருதுகளை பெற்றவரும், தற்போது இளையராஜாவின் மாணவருமாகிய லிடியன் நாதஸ்வரனிடம் நடந்த நேர்காணல்:

    “நான் அவரது முதல் மாணவர்“…. இளையராஜாவிடம் இசை நுணுக்கங்களை கற்கும் லிடியன் !“நான் அவரது முதல் மாணவர்“…. இளையராஜாவிடம் இசை நுணுக்கங்களை கற்கும் லிடியன் !

    18 மணி நேரம்

    18 மணி நேரம்

    Q : இளையராஜாவின் மாணவனாகும் வாய்ப்பு தங்களுக்கு எப்படி கிடைத்தது?

    A : இந்த வாய்ப்பிற்காக நான் 1 வருடம் காத்திருந்தேன். இளையராஜாவின் வயலினிஸ்ட் ஸ்ரீராம் அவர்கள் எனது தந்தையின் நண்பர். அவரின் மூலமாக இவ்வாய்ப்பினை நான் பெற்றேன். இதை என் வாழ்நாளில் நான் பெற்ற வரமாக கருதுகிறேன்.

    Q: ஊடகங்களில் இளையராஜாவை பற்றி வரும் மாறுபட்ட கருத்துக்களை பற்றி தங்களின் கருத்து என்ன?

    A :என்னைப் பொறுத்தவரை இளையராஜா சார் ஒரு இசைப் பல்கலைக்கழகம், அவர் எளிமை, மற்றும் நேர்மையானவர். தினமும் 18 மணி நேரம் உழைக்கக்கூடியவர். . நான் எப்பொழுது சந்தேகம் கேட்டாலும் முகம் சுளிக்காமல் விளக்கம் கொடுப்பவர். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் நான் 3 வயதில் கூறியது போல் அவர் தான் எனக்கு சாமி. இசையை தவிர வேறொன்றும் அவருக்கு ஸ்டுடியோவிற்குள் தெரியாது. அவர் உலகம் இசையால் நிரம்பியது .

    ஆங்கில வரிகளுக்கு தகுந்தாற்போல்

    Q :இளையராஜாவுடன் கம்போஸ் செய்யும் சூழ்நிலை அமையும் போது எந்த மாதிரி படங்கள் பண்ண விரும்புகிறீர;கள்?

    A :அவரிடம் தினமும் 2 மணிநேரம் பயிற்சி பெறுவதே எனக்கு கிடைத்த மேலான வாய்ப்பாக கருதுகிறேன்.

    பந்துவாளி ராகம் இளையராஜாவின் பாடல்களில் அமைந்துள்ள ராகங்கள் குறித்து இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

    Q :உங்களை [பொறுத்தவரை எந்த பாட்டு ரொம்ப கஷ்டப்பட்டு செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

    A : சினிமாப்பாடல்களை தவிர அவருடைய ஆல்பம் பாடல்களில் Nothing But Wind, How to Name it, Geethanjali, திருவாசகம் போன்றவை ரொம்பவே பிடிக்கும். திருவாசகம் பாடல்களை பார்த்தால், அனைத்தும் சிம்போனியில் இருக்கும். நடுவில் ஆங்கில வரிகளுக்கு தகுந்தாற்போல் கம்போசிங் செய்திருப்பார். How to Name it ஆல்பத்தில் எல்லா நோட்டுகளும் வயலின், கிதார் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரசன் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பார். Champer Welcomes Thiyagaraja ஆல்பத்தில் கிதார் 30 நொடிகளில் பயன்படுத்தியிருப்பார். உலகத்தில் பந்துவாளி ராகத்தை கிதாரில் பயன்படுத்தியது இளையராஜா எனும் உன்னதமான கலைஞனை தவிர வேறு யாரையும் நான் பார்த்தது கிடையாது.

    பியானோ என்னுடைய பேவரைட்

    பியானோ என்னுடைய பேவரைட்

    Q :லிடியன் நாதஸ்வரம் உங்கள் பெயர் பற்றி சொல்லுங்கள் .

    A :என்னுடைய பெயர் கல்யாணி ராகத்தை அடிப்படையாக கொண்டது. எனது அப்பா தான் First Musician. பிறகு எனது அக்கா. அடுத்து நான். நான் தான் NCPA FIRST INDIAN Pianist For Indian Orchestra. அப்பொழுது இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபலங்கள் என்னை வாழ்த்தியது என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தியது. பியோனா, டிரம்ஸ் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    Q :சிறு குழந்தைகளுக்கு, குட்டீஸ் இசையமைப்பாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    A :உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யுங்கள்.

     மிகப்பெரிய விருது

    மிகப்பெரிய விருது

    Q :நீங்கள் பெற்ற விருதுகளில் மிகவும் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது எது?

    A :சமீபத்தில் இசைக்காக எனக்கு சுர்யோஸ்னா விருது கிடைத்தது. World Best Competition Titleஐ ஜெயிச்சேன். 2013ஆம் ஆண்டு Pogo Youngest Best Champer விருதும் கிடைத்தது. இந்த விருதுகளை விட இளையராஜா அவர்களிடம் சென்று நான் படிப்பதே எனது வாழ்நாள் சாதனையாகவும், மிகப்பெரிய விருதாகவும் கருதுகிறேன்.

    Q உங்களுடைய அடுத்த புராக்ஜ்ட்?

    A : நநடிகர் மோகன்லால் இயக்கும் முப்பரிமாண படமான "பாரோஸ்" படத்திற்கு இசையமைக்கிறேன். ஜாஸ் ஆல்பம் ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறினார். இன்னமும் நிறைய கேள்வி பதில்களை ஸ்வாரஸ்யமாக பேசி உள்ளார் லிடியன். முழு வீடியோவை பில்மிபீட் தமிழ் யூட்யூப் தளத்தில் காணலாம் .

    English summary
    Music is the Important soul For Illayaraja Says Lydian Nadhaswaram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X