»   »  நான் நடிக்கவில்லை-முத்துலட்சுமி

நான் நடிக்கவில்லை-முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil

கன்னட இயக்குநர் ரமேஷ் இயக்கத்தில், ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவுள்ள படத்தில் நான்நடிக்கவில்லை. இதுதொடர்பாக இயக்குனர் ரமேஷ் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சந்தனக் கடத்தல் வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

கன்னட இயக்குநர் ரமேஷ், சயனைட் என்ற பெய>ல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுபா, சிவராஜன் ஆகியோ>ன்தற்கொலையை மையமாக வைத்து ஒரு படம் இயக்கினார். இப்படம் தமிழில் குப்பி என்ற பெயரில் வெளியானது.

இந் நிலையில் வீரப்பன் கதையை படமாக்க நினைத்தார் ரமேஷ். ஆனால் அதற்கு முத்துலட்சுமி சம்மதிக்கவில்லை. மேலும், கோர்ட்டில்இடைக்காலத் தடையும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடத்தல் சம்பவத்தை படமாக்க முடிவு செய்தார் ரமேஷ். இதுதொடர்பாக நேற்று ஒருஅறிவிப்பையும் வெளியிட்டார். அதில், ராஜ்குமாராக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகேஸ்வரராவ், அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாராக நடிகர்அர்ஜூன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், முத்துலட்சுமியும் படத்தில் நடிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த செய்தியை முத்துலட்சுமி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், வீரப்பன் கதையை படமாக்கவோ, டிவி தொடராக ஒளிபரப்பவோகூடாது எண்று சென்னை உயர்நீதிமன்றம் மூலமாக நான் தடை உத்தரவு பெற்றுள்ளேன்.

2 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் என்னைப் பார்க்க வந்தார். அப்போது ராஜ்குமார் ஒரு கடவுள். அவரது கடத்தலை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என்று என்னிடம் கூறினார். படத்தில் வீரப்பனை கெட்டவன் போல சித்தரிக்க இருப்பதாகவும் கூறினார். மேலும், நீங்களும் நடிக்கவேண்டும், உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன் என்றார்.

இதைக் கேட்டு நான் கோபமடைந்தேன். ஆத்திரத்தில் அவரை நன்கு திட்டி அனுப்பி விட்டேன். அப்போது அவர் என்னிடம், உங்களது அனுமதிஎனக்குத் தேவையில்லை. அனுமதி கொடுக்காவிட்டாலும் கண்டிப்பாக படம் எடுக்கத் தான் போகிறேன் என்றார்.

நானும் விடாமல், எனது அனுமதி இல்லாமல் படம் எடுத்தால், வழக்கு தொடருவேன், படத்தை ஒரு இடத்திலும் திரையிட அனுமதிக்க மாட்டேன்.போராட்டம் நடத்துவேன் என்றேன்.

இந் நிலையில்தான் நான் அவரது படத்தில் நடிக்கப் போவதாக பொய்யான செய்தியை பரப்பியுள்ளார். குடும்பப் பெண்ணான என்னைசினிமாவில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளது எனது பெயரை கெடுப்பதாக உள்ளது.

என்னை அவமானப்படுத்தி விட்டார். எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பது போல இந்த செய்தி உள்ளது.

எனவே ரமேஷ் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போகிறேன். வீரப்பனின் வாழ்க்கை எனக்கு மட்டுமே முழுமையாக தெரியும். அவரதுசெயல்பாடுகள், அவரது பழக்க வழக்கங்கள், அவரது எண்ணம் உள்ளிட்டவை எனக்கு மட்டுமே நன்கு தெரியும். எனவே வீரப்பன் கதையை நான்மட்டுமே தயாரிப்பேன். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது என்றார் முத்துலட்சுமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil