twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிய தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவுக்காக சுமந்து வருகிறார் என் தந்தை! - சவுந்தர்யா

    By Shankar
    |

    கோச்சடையான் படம் மூலம், ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்தியத் திரையுலகுக்காக தன் தோளில் சுமந்து வருகிறார் என் தந்தை, என இயக்குநர் சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

    கோச்சடையான் வெளியாவதையொட்டி, அப்படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டி:

    6 ஆண்டுகள்

    6 ஆண்டுகள்

    இந்தியாவிலேயே முழுமையாக நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தைப் (மோஷன் கேப்சர் டெக்னாலஜி) பயன்படுத்தி முதன்முதலாக வெளிவரும் "கோச்சடையான்" திரைப்படத்திற்காக, கடந்த 6 ஆண்டுகளாக மோஷன் கேப்சர் மற்றும் அனிமெஷன் டெக்னாலஜியை முழுமையைகக் கற்று, இத்திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறேன்.

    பெரிய பட்ஜெட்

    பெரிய பட்ஜெட்

    இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு புதுமையாக இத்திரைப் படம் இருக்கும். ஹாலிவுட் திரைப்படங்களான 2009-ல் வெளியான ‘அவதார்' மற்றும் 2011 -ல் வெளியான ‘டின்டின்' போல இத் திரைப்படமும் பெரிய பட்ஜெட்டில், மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழ்ப் பெயர்

    தமிழ்ப் பெயர்

    ‘கோச்சடையான்' என்பது தூய தமிழ்ப் பெயர். இது கதாபாத்திரத்தின் (ரஜினிகாந்த்) பெயர் என்பதால் ஹிந்தி மற்றும் இதர மொழிகளிலும் இதே பெயரிலேயே வெளிவருகிறது. கோ என்றால் சிவபக்தன் என்றும், சடையான் என்றால் நீளமான முடியுடையவன் என்றும் பொருள்.

    அப்பா ரஜினி தவிர, ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே என்னுடைய முதல் படத்தில் இயக்குவது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது.

    டான்சர்

    டான்சர்

    ‘கோச்சடையான்' பாத்திரம், கதைப்படி நடனத்தில் தேர்ச்சி பெற்ற பாத்திரம். ‘தளபதி'யில் அப்பா ரஜினிகாந்துடன் ஷோபனா நடித்த காட்சிகளை என்னால் மறக்க முடியாது. இப்போது என் அப்பாவுடன் ஷோபனாவை இயக்குவது ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது.

    எல்லோருக்குமே புதுசு

    எல்லோருக்குமே புதுசு

    என்னைப் போலவே இந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்களுக்கும் இந்த நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் புதியதுதான். எனவே, ஒவ்வொரு காட்சி ஒளிப்பதிவு செய்வதற்கு முன்னும், அதுபற்றி விளக்கமாக விவரித்துவிட்டே ஆரம்பித்தோம்.

    ரஜினி எனும் திறமைசாலி

    ரஜினி எனும் திறமைசாலி

    அப்பா ரஜினிகாந்த் எங்களை மிகவும் நேசிப்பவர், பாதுகாப்பவர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் திறமை, தொழில்பக்தி மிக்கவர். ரசிகர்களைப் பொறுத்தவரை தங்கள் தலைவருடைய ஒவ்வொரு ஆக்ஷனையும் மிகவும் ரசிக்கும் வகையில் படத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறோம்.

    குறைத்து மதிப்பிட வேண்டாம்

    குறைத்து மதிப்பிட வேண்டாம்

    பொழுதுபோக்குத் திரைப்படத்தில் இத்தகைய புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதை யாரும் குறைத்து மதிப்பிடவேண்டாம். இதன் சக்தியை திரைப்படத்தைப் பார்த்தபின் புரிந்து கொள்வார்கள்.

    சிரமப்படுத்தாமல்

    சிரமப்படுத்தாமல்

    என்னுடைய தந்தை ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சரியான பின்னர் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி விவரித்தேன். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அப்பாவையும் அதிகம் சிரமப்படுத்தாமல் இந்தத் திரைப்படத்தை எடுக்கலாம் என்று கூறி அதன்பிறகு இப்படத்தில் நடிக்க அப்பா சம்மதத்தைப் பெற்றேன்.

    தன் தோளில் சுமந்து...

    தன் தோளில் சுமந்து...

    என்னுடைய தந்தை ரஜினிகாந்தின் இந்தப் படத்தை அனைவரும் ரசித்துப் பார்ப்பார்கள். இது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரஜினிகாந்த் படம். கண்டிப்பாக அனைவரையும் ரசிக்க வைக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய தோளில் சுமந்து இந்தியத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தவைத்த என்னுடைய தந்தைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதனைப் படம்

    சாதனைப் படம்

    ‘கோச்சடையான்' திரைப்படக் காட்சிகளில் வரும் ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது, செதுக்கப்பட்டிருக்கிறது. கறுப்பு, வெள்ளையிலிருந்து கலர் திரைப்படத்திற்கும் அதன் பின்னர் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய படங்களும் வந்திருக்கின்றன. ‘கோச்சடையான்' 100 வருட இந்திய சினிமாவின் வளர்ச்சியைக் குறிக்கும் சாதனைத் திரைப்படமாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை!

    -இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

    English summary
    Here is Soundarya Rajinikanth's interview on the release of Rajini Kochadaiiyaan movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X