பிடித்த ஹீரோ விஜய்! அவங்க பென்ஸ் கார் நான் மாருதி கார்... பனாரஸ் படத்தின் அறிமுக நாயகன் தன்னடக்க பேச்சு

சென்னை: கே.ஜி.எஃப் திரைப்படத்தை தொடர்ந்து கன்னட திரைப்படங்களுக்கும் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த காந்தாரா என்கிற திரைப்படத்தை கூட ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் பாராட்டி இருந்தார்கள்.

அந்த வகையில் பான் இந்தியன் திரைப்படமாக அடுத்ததாக உருவாகி இருக்கும் பனாரஸ் என்கிற கன்னட படமும் இந்தியா முழுக்க வெளியாகவுள்ளது.

பனாரஸ்

பனாரஸ்

வட இந்திய வாரணாசியில் இருக்கும் பனாரஸ் என்கிற இடத்தில் நடக்கும் காதல் கதைதான் பனாரஸ் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. கர்நாடகாவில் நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ள ஒருவரின் மகன் சையத் கான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முதல் படமே பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக சோனல் மான்டிரோ நடித்துள்ளார்.

விஷால் அப்பா

விஷால் அப்பா

நடிகர் விஷாலின் அப்பாவும், நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டியும் சையத் கானின் தந்தையும் பள்ளி காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம். கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவை எடுத்தவுடன் சையத் ஜி.கே.ரெட்டியிடம் கூறி அவர் மூலம்தான் தனது குடும்பத்தை சம்மதிக்க வைத்ததாக கூறியிருக்கிறார். சமீபத்தில் ஜி.கே.ரெட்டிதான் இந்தப் படத்தினுடைய ஒரு பாடல் வெளியீட்டு விழாவை முன்னிருந்து நடத்தினார். தமிழ் பதிப்பிற்கு பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுத, சித்ரா, திப்பு, பிரதீப் உள்ளிட்டோர் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

பிணத்துடன் படப்பிடிப்பு

பிணத்துடன் படப்பிடிப்பு

இந்த படம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பனாரஸ்ஸில் படம் பிடிக்கப்பட்டு, 10 சதவீதம் பெங்களூரில் படம் பிடிக்கப்பட்டதாம். பொதுவாக அங்கு பிணங்கள் எரிக்கப்படும், ஆங்காங்கே பிணங்கள் மிதக்கும். சில காட்சிகளில் நடிக்கும் பொழுது பிணம் எரிந்து கொண்டே இருக்கும் அந்த வாசனையை முகர்ந்தபடியே நாங்கள் நடிக்க வேண்டி இருந்தது. சில காதல் காட்சிகளை கூட அப்படி படம் பிடித்தோம் என்று சையத் கான் கூறியிருக்கிறார்.

விஜய் சுதீப் யாஷ்

விஜய் சுதீப் யாஷ்

சையத்திற்கும் சோனலுக்கும் பிடித்த கதாநாயகன் விஜய்தானாம். அது மட்டுமின்றி ஏற்கனவே தமிழில் வெற்றி கண்ட கன்னட நடிகர்களான சுதீப் மற்றும் யாஷ் போல நீங்களும் வெற்றி கொடுப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர்கள் மிகப் பெரிய நடிகர்கள். கன்னடத்தில் சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள். ஆனால் இதுதான் என்னுடைய முதல் படம். அவர்கள் விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் போன்றவர்கள். நான் மாருதி கார்தான். எனவே அவர்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று பணிவுடன் கூறியிருக்கிறார் சையத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X