மீ டூ பற்றி நான் 'அப்படி' சொல்லவே இல்லை, எடிட் பண்ணிட்டாங்க: ப்ரீத்தி ஜிந்தா

By Siva

Recommended Video

மீ டூ பற்றி நான் 'அப்படி' சொல்லவே இல்லை : ப்ரீத்தி ஜிந்தா- வீடியோ

மும்பை: நான் அளித்த பேட்டியை எடிட் செய்து போட்டுவிட்டார்கள் என்று பாலிவுட் ஹங்கமா இணையதளம் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் பாலிவுட் ஹங்கமா இணையதளம் இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் பேட்டி எடுத்தது. அந்த பேட்டி வீடியோவை பார்த்த மக்கள் கடுப்பாகிவிட்டனர்.

காரணம் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் ப்ரீத்தி.

ப்ரீத்தி

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் பாலிவுட். சில பெண்கள் விளம்பரம் தேட மற்றும் பழி வாங்க மீ டூ இயக்கத்தை பயன்படுத்துவதாக ப்ரீத்தி தெரிவித்துள்ளார். மேலும் தன் வாழ்வில் அப்படி எதுவும் நடந்தது இல்லை என்றும், நடந்திருந்தால் மீ டூ குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கலாம் என்றும் அவர் கூறியதை பார்த்த மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

திட்டு

ப்ரீத்தி ஜிந்தாவின் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கிண்டல்

மீ டூ இயக்கத்தை மதிக்காவிட்டாலும் கிண்டல் செய்யாமல் இருக்கலாமே என்று ப்ரித்தியை பலரும் விளாசியுள்ளனர்.

புகார்

தான் அளித்த பேட்டியை எடிட் செய்து இப்படி காட்டியுள்ளதாக ப்ரீத்தி கூறியுள்ளார். மேலும் தன்னை பேட்டி கண்ட பத்திரிகையாளரை அவர் விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X