தென்னிந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்தது மாதிரி இருக்கு: 'கமல் சகாப்தம்' பற்றி சரிகா

By Siva

மும்பை: திருமணம் என்பது ஏதோ தென்னிந்தியாவுக்கு டூர் சென்றுவிட்டு வீடு திரும்பி வேலையை தொடர்வது போன்று எனக்கு இருக்கிறது என்று சரிகா தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனை காதலித்து திருமணம் செய்து ஸ்ருதி, அக்ஷரா என்ற இரண்டு மகள்களுக்கு தாயாகி பின்னர் கணவரை பிரிந்துவிட்டார் சரிகா.

தற்போது மும்பையில் இளைய மகள் அக்ஷராவுடன் வசிக்கும் அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

வாய்ப்புகள் ஏராளம்

வாய்ப்புகள் ஏராளம்

எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் எனக்கு எது பொருந்துமோ அதை மட்டுமே தேர்வு செய்கிறேன். அது வெறும் 2 நிமிட கதாபாத்திரமாக இருந்தால் கூட எனக்கு பொருந்தும் என்றால் ஒப்புக் கொள்கிறேன் என்றார் சரிகா.

மீண்டும் குழந்தையானேன்

மீண்டும் குழந்தையானேன்

யஷ் அங்கிளுடன் ஹம்ராஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். இந்நிலையில் அவரின் கடைசி படமான ஜப் தக் ஹை ஜான் படத்தில் நடித்த 5 நாட்களும் நான் மீண்டும் 4 வயது சிறுமியானது போல் உணர்ந்தேன் என்று சரிகா தெரிவித்தார்.

ஸ்ருதியுடன்

ஸ்ருதியுடன்

உங்களின் மூத்த மகள் ஸ்ருதியுடன் குறும்படம் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டதற்கு அதை இப்பொழுதே கூறிவிட முடியாது என்று தெரிவித்தார் சரிகா.

அக்ஷரா

அக்ஷரா

இளைய மகள் அக்ஷரா ஹாஸன் பற்றி பேச சரிகா மறுத்துவிட்டார். அக்ஷரா தனுஷுடன் இந்தி படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியா டூர்

தென்னிந்தியா டூர்

திருமணம் என்பது ஏதோ தென்னிந்தியாவுக்கு டூர் சென்றுவிட்டு வீடு திரும்பி வேலையை தொடர்வது போன்று எனக்கு இருக்கிறது. திருமண பந்தம் இல்லை என்றான பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வந்தது கஷ்டமாகத் தான் இருந்தது என்று சரிகா கூறினார்.

மறுமணம்

மறுமணம்

திருமணம் என்பது அழகானது என்று கூறிய சரிகாவிடம் மறுமணம் பற்றி கேட்டதும் டென்ஷனாகிவிட்டார். கதவு திறந்திருக்கிறது கிளம்புகிறீர்களா என்று கோபமாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X