விஷால் உங்களை அடிச்சாரா.. துப்பறிவாளன் 2வில் என்ன பிரச்சனை.. மிஷ்கின் தம்பி பிரத்யேக பேட்டி!
சென்னை: இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஜி.ஆர். ஆதித்யா அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குநர் மிஷ்கினை நீக்கிவிட்டு, விஷால் அந்த படத்தை இயக்கி வருகிறார்.
மிஷ்கின் போட்ட 15 கண்டிஷன்கள் தான் மிஷ்கினை நீக்க காரணம் என விஷால் தரப்பு தெரிவித்திருந்தது.
அதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக மிஷ்கின் பேசிய பேச்சு கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் தம்பி
இயக்குநர் மிஷ்கினின் தம்பியும், சவரகத்தி படத்தின் இயக்குநருமான ஜி.ஆர். ஆதித்யா நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஜி5 ஒரிஜினல்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக கண்ணாமூச்சி எனும் வெப் தொடருக்கு இயக்குநர் ஜி.ஆர். ஆதித்யா கதை எழுதி உள்ளார். அதன் வெளியீட்டு விழாவில் தான் மிஷ்கின், விஷாலை வச்சு விளாசித் தள்ளினார்.

துப்பறிவாளன் பிரச்சனை
துப்பறிவாளன் முதல் பாகத்தில் அண்ணன் இயக்கத்தில், உதவி இயக்குநராக ஜி.ஆர். ஆதித்யா வேலை செய்துள்ளார். துப்பறிவாளன் 2ம் பாகத்தில், முக்கிய கதாபாத்திரத்திலும் ஜி.ஆர் ஆதித்யா நடித்து வருகிறார். இந்நிலையில், மிஷ்கின் மற்றும் விஷாலுக்கு இடையே எழுந்த பிரச்சனையால், பல குழப்பங்கள் உருவாகி உள்ளது.

விஷால் அடித்தார்
மேலும், விஷால் - மிஷ்கின் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில், மிஷ்கினின் தம்பி ஜி.ஆர். ஆதித்யாவை விஷால் அடித்துள்ளார். அதுபற்றி பேசிய ஆதித்யா, இப்பவும் விஷாலை அண்ணனாகத் தான் நினைக்கிறேன். இதுபற்றி அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. இருவரும் கோபத்தில் இருக்கின்றனர். சீக்கிரம் இந்த பிரச்சனை சரியாகும் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மறுபடியும் பூர்ணா
மிஷ்கின் நடிப்பில் வெளியான சவரக்கத்தி படத்தில் நாயகியாக பூர்ணாவை நடிக்க வைத்த ஜி.ஆர். ஆதித்யா, தற்போது, கண்ணாமூச்சி வெப்சீரிஸிலும் நடிகை பூர்ணாவை நடிக்க வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, பூர்ணாவின் எதார்த்தமான நடிப்பு இந்த இரண்டு கதைகளுக்கும் தேவைப்பட்டதால், அவரை தேர்வு செய்தேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications