கல்யாணம் ஆகி மூனு நாள்ல.. ஓகே சொன்ன நாய் சேகர் சதிஷ்.. வேற லெவல் அட்ராசிட்டிஸ்!

சென்னை : ஏஜிஎஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள "நாய் சேகர்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Cook with Comali பெரிய Turning Point | Naai Sekar Pavithra Lakshmi & Sathish

அறிமுக இயக்குனராக கிஷோர் ராஜ்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா மாறன், மனோபாலா, இளவரசு, லிவிங்ஸ்டன் என்று காமேடி பட்டாளமே நடித்துள்ளார்கள.

இப்படத்தை ப்ரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். கிஷோரும் ப்ரவீனும் நண்பர்கள். பல குறும்படங்கள், விளம்பரப் படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இருவரும் நமது பிலிமிபீட் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

அவன் தான் டைரக்ட் பண்ண சொன்னான்..

அவன் தான் டைரக்ட் பண்ண சொன்னான்..

கேள்வி : நடிகர் ப்ரவீன், இயக்குனர் பிரவீனாக ஆனது எப்படி ?

கிஷோர் பதில் : ப்ரவீனும், நானும் பல வருஷமா ட்ராவல் பண்ணிட்டு இருக்கோம். நிறைய படைப்புகள் ரெண்டு பேரும் குடுத்துருக்கோம். அவன்தான் என்ன டைரக்டர் ஆக சொன்னதே.. உனக்கு அந்த திறம இருக்கு நிச்சயம் நீ பண்ணுன்னு சொல்லிட்டு இருப்பாரு. ஒருவழியா அது உண்மையாகிடுச்சு. நான் வழக்கமா நடிச்சிட்டு இருந்துட்டு, திடீர்ன்னு டைரக்டர் ஆகிட்டதே சந்தோஷம். இந்த படத்திலயும் ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.

நாய் மைண்ட் வாய்ஸ்

நாய் மைண்ட் வாய்ஸ்

கேள்வி : நாய் சேகர் உருவான வரலாறு என்ன ?

கிஷோர் பதில் : அவன் வீட்ல ஒரு நாய் இருக்கும். அது எங்களுக்கு செம ஃப்ரெண்ட். எல்லாரையும் பாத்தா குலைக்கும் என்ன பாத்தா மட்டும் குலைக்காது. போறப்ப வரப்பல்லாம் அந்த நாய் பாக்கும். அதோட மைண்ட் வாய்ஸ்லாம் சொல்லிட்டே இருப்போம். அப்படியே அதையே கான்செப்ட்டா வக்கலாம்ன்னு யோசிச்சோம். படமாவே பண்ணலாம்ன்னு ப்ரவீன் தான் ஐடியா குடுத்தாரு. சதீஷ் கல்யாணம் ஆகி மூனு நாள்ல அவர் கிட்ட போயி, கல்யாண கிஃப்ட்டுன்னு சொல்லிதான் இந்த படத்தோட கதைய சொன்னோம். அவருக்கும் ரொம்ப பிடிச்சிடுச்சு. ஓகே பண்ணிட்டாரு.

செம கெமிஸ்ட்ரி

செம கெமிஸ்ட்ரி

கேள்வி : நாய்க்கு சேகருக்கும் கெமிஸ்ட்ரி எப்படி?

பதில் கிஷோர் : நாய்க்கும் சேகரா நடிச்சிருக்க சதீஷ்க்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி வரனும். அதுக்காக ரொம்ப ரிஹர்சல் பார்த்தோம். மனோபாலா, சுவாமிநாதன் இன்னும் நிறைய பெரிய பெரிய ஆர்டிஸ்ட்ல்லாம் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க. இது எல்லாத்துக்குமே ப்ரொடக்ஷன் டீம்ல இருந்து குடுத்த சப்போர்ட் தான் ரொம்ப முக்கியமான காரணம்.

நாய்சேகருக்கு நாயகி

நாய்சேகருக்கு நாயகி

கேள்வி : ஹீரோயின் பவித்ரா பத்தி சொல்லுங்களேன்.

கிஷோர் பதில் : இந்த படத்துக்கு ஹீரோயின் நிச்சயமா ஒரு தமிழ் பொண்ணா, நல்ல தமிழ்பேசத்தெரிஞ்ச பொண்ணா இருக்கனும்ன்னு நான் ரொம்ப உறுதியா இருந்தேன். குக் வித் கோமாளி ஷோ போயிட்டு இருந்த டைம். டீம் ல கோ டைரக்டர் பிரசன்னா கிட்ட பேசிட்டு இருந்தப்போ, அவரே நம்பர் குடுத்தார். எல்லாம் சூப்பரா அமைஞ்சது. ஆபீஸ்ல வந்து பேசி, கதை ஓக்கே பண்ணிட்டாங்க. சதீஷும் சரி, பவித்ராவும் சரி ரெண்டு பேருமே டயலாக் மறக்கவே மாட்டாங்க. அவ்ளோ சூப்பரா பேசுவாங்க. ஆரம்பத்துலயே ஸ்கிரிப்ட் வாங்கிட்டு போயி, அவ்ளோ அழகா அந்த மாடுலேஷனோட மனப்பாடம் பண்ணி, ரொம்பவே கேஷ்வலா நடிச்சிருந்தாங்க.

செம ஃபைட்

செம ஃபைட்

கேள்வி : ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேல் பற்றி ?

ப்ரவீன் பதில் : எனக்கு ஆரம்பத்துல ரொம்ப பயம் இருந்துச்சு. எப்படி இத நேச்சுரலா குடுக்குறதுன்னு ரொம்பவே பயமா இருந்துச்சு. முருகன், மிராக்கிள் மைக்கேல் மாஸ்டர் ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி சொல்லனும். அவங்க இல்லன்னா இந்த படம் இல்ல. ஏன்னா.. சின்ன சின்ன ட்ரிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணதால அவ்ளோ நேச்சுரலா குடுத்துருந்தாங்க. அந்த நாயோட கை ஒரு டம்மி ரெடி பண்ணி, அத வச்சி, அப்பறம் சிஜி ஒர்க் பண்ணதால ரொம்பவே நல்லா வந்துச்சு. அப்பறம் படத்துல அந்த நாய் ஒரு கிக் அடிக்கும், கீழ போயி விழற மாதிரி ஒரு ஷாட் இருக்கும். ஆனா அது ரிவர்ஸ் ஷாட். அத அப்படியே ரிவர்ஸ் பண்ணி பாக்கும்போது பாத்தா, அந்த நாய் எகிறி அடிக்கிற மாதிரி இருக்கும். அந்த லெவல் அவுட்புட் எல்லாம் குடுத்ததுக்கு முருகனும், மிராக்கிள் மைக்கேல் மாஸ்டரும் மிக முக்கிய காரணம். என்று கலகலப்பாக பேசினார்கள்.இது போல் பல சுவாரஸ்யமான விஷயங்களை நமது பிலிமிபீட் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X