For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சமந்தாவுக்காக போட்ட டாட்டூ..அழிக்க மனம் வரவில்லை..நெகிழவைத்த நாகசைத்தன்யா!

  |

  சென்னை : சமந்தாவும் நாகசைத்தன்யாவும் பிரிந்து ஓராண்டுக்கு மேலான போதும், நாகசைத்தன்யா திருமண தேதியை குறிக்கும் டாட்டூவை இன்னும் அழிக்காமல் வைத்து இருக்கிறார்.

  நடிகை சமந்தா அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

  சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, குடும்பத்தை நடத்தி வந்தார். யார் கண் பட்டதோ நாகசைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

  “சினிமாவில் நிறைய அனுபவங்கள் பார்த்தாச்சு”: தீடீர்ன்னு எல்லாருக்கும் நன்றி சொன்ன நாக சைத்தன்யா “சினிமாவில் நிறைய அனுபவங்கள் பார்த்தாச்சு”: தீடீர்ன்னு எல்லாருக்கும் நன்றி சொன்ன நாக சைத்தன்யா

  பிரிந்தனர்

  பிரிந்தனர்

  இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சமந்தாவை குறை கூறும் விதமாகவே பல்வேறு வதந்திகள் பரவியது. சமந்தா சுயநலவாதி, கர்ப்பத்தை கலைத்தார், குழந்தை பெற்று தர மறுத்தார், வேறு ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்தார் என்பது போல் சிலர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட அதுவும் நெருப்பாக பற்றி எரிந்தது.

  லால் சிங் சத்தா

  லால் சிங் சத்தா

  ஹிந்தியில் ஆமிர் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் லால் சிங் சத்தா திரைப்படத்தில் நாகசைத்தன்யா நடித்துள்ளார். நடிகர் அமீர்கானின் நண்பனாக, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாக சைத்தன்யா இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். இப்படம் நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது.

  பாலிவுட் படம் பிடிக்கும்

  பாலிவுட் படம் பிடிக்கும்

  இந்நிலையில், லால் சிங் சத்தா திரைப்படம் குறித்து பேட்டி அளித்த நாக சைத்தன்யா, எனக்கு பாலிவுட் படங்கள் எப்போதும் பிடிக்கும். அவர்களின் கன்டென்ட்டை நான் விரும்புகிறேன். அவர்கள் உண்மையில் எல்லைகளை விரிவாக்குகிறார்கள். அவர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன என்றார்.

  இதுதான் காரணம்

  இதுதான் காரணம்

  மேலும், தனது கையில் இருக்கும் டாட்டூ குறித்து பேசிய அவர், மணிக்கட்டில் இருக்கும் டாட்டூ, அது தனது திருமண தேதியை குறிக்கும் டாட்டூ என்றும், அது தெரியாமல் எனது ரசிகர்கள் பலர் அதனை காப்பி அடித்து வருவதாக கூறிய, நாக சைத்தன்யா, தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள் என ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி அந்த டாட்டூவை அழிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இதுநாள் வரைக்கும் எனக்கு வரவில்லை. எதையும் மாற்ற வேண்டாம், அது அப்படியே இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி உள்ளார்.

  சமந்தா 3 இடத்தில் டாட்டூ

  சமந்தா 3 இடத்தில் டாட்டூ

  நடிகை சமந்தா முதுகில் 'Ye Maaya Chesave' என்ற படத்தின் நினைவாக 'ymc' என்ற டாட்டூம், மணிக்கட்டுடில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் நாகசைதன்யாவும் ஒரே மாதிரி பச்சை குத்தி இருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றையும் தன்னுடைய முதுகு பகுதியில் சமந்த குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Naga Chaitanya, who got divorced from actress Samantha Ruth Prabhu, last year.Naga Chaitanya has no plans to remove his tattoo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X