இளையராஜா,யுவன் காம்போ…கஸ்டடி அட்டகாசமாக இருக்கும்.. நாகசைத்தன்யா பேட்டி!

சென்னை : தெலுங்கு நடிகரான நாக சைதன்யா வெங்கட் பிரபுவின் கஸ்டடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மே மாதம் 12ம் தேதி ரிலீஸாகும் கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

Nagachaitanya exclusive interview

கஸ்டடி : இந்நிலையில் நாகசைத்தன்யா நமது பிலிமீ பீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கஸ்டடி எனது முதல் தமிழ் படமாக இருந்தாலும், இந்த படத்தின் டீசர், டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கமாக வெங்கட்பிரபு படம் என்றால், அது நகைச்சுவையாக இருக்கும் ஆனால், கஸ்டடி கொஞ்சம் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும்.

கதை பிடித்துவிட்டது : வெங்கட்பிரபு என்னுடைய லவ் ஸ்டோரி படத்தை பார்த்துவிட்டுத்தான் கஸ்டடி படத்தின் கதையை என்னிடம் கூறினார். எனக்கும் அந்த கதைபிடித்துவிட்டதால் படத்தில் நடிக்க சம்பதித்தேன். வெங்கட் பிரபுவுக்கும் தெலுங்கில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று ஆசை, எனக்கும் நேரடியான தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இருவரின் ஆசையும் இந்த படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது.

Nagachaitanya exclusive interview

தமிழ் ஆடியன்சுக்கு பிடிக்கும் : அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு கதை நன்றாக இருந்தால் போதும், தமிழ் படம், தெலுங்கு படம் என்று பிரித்து பார்ப்பது இல்லை. இப்போது ஓடிடி வந்து விட்டதால், நல்ல கதை எந்த மொழியில் வந்தாலும்,அதை ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள். மக்களுக்கு தேவை கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். இதனால், என்னையும் தமிழ் ஆடியன்ஸ் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கான்ஸ்டபிள் : தமிழ் திரைப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் குறித்து நிறையபடம் வந்து இருந்தாலும், தெலுங்கு ஆடியன்சுக்கு இந்த கதைக்களம் புதிது. எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அந்த இடத்திற்கு ஆயுதமே இல்லாமல் முதலில் போவது கான்ஸ்டபிள் தான், இதுபோன்று அவர்களுக்கு நிறைய கதை இருக்கிறது. இதைத்தான் வெங்கட் பிரபு இப்படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார். மேலும், இப்படத்தில் சிவா என்ற ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.

Nagachaitanya exclusive interview

எனக்கு கிடைத்த போனஸ் : இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். வெங்கட்பிரபு படத்திற்கு யுவன் இசையமைப்பார் என்று தெரியும்,இருந்தாலும், இளையராஜா இசையமைப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.இது எனக்கு கிடைத்த போனஸ்.

நிச்சயம் ஹிட்டடிக்கும் : இந்த படத்தின் கதை 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் நடப்பது போல இருப்பதால், அந்த காலகட்டத்திற்குள் மக்களை கொண்டுவர இளையராஜாவால் மட்டுமே முடியும் என்பதால் அவரிடம் கேட்டோம். இதனால்,பாடல்களை பற்றி சொல்லவே வேண்டாம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் யுவுன் மற்றும் இளையராஜா கூட்டணியில் ஒரு யூனிக்கான பாடல் இந்த படத்தில் இருக்கிறது என்று நாகசைத்தன்யா அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X