கூலி படத்துல நாகார்ஜுனா கேரக்டர் இதுதான்.. கிங்கிடமே கெத்துக்காட்டிய லோகேஷ் கனகராஜ்.. இவ்ளோ மோசமா?
சென்னை: சுமார் 4000 கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் டோலிவுட்டின் கிங் நாகார்ஜுனாவிடம் கூலி படத்தில் நடிக்க கதை சொல்லும் போது, லோகேஷ் கனகராஜ் காட்டிய கெத்து குறித்து குபேரா படத்தின் புரமோஷனில் நாகார்ஜுனா மெய் சிலிர்த்து பேசியது ரசிகர்களையும் கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. சுமார் 57 நாட்கள் மட்டுமே படம் வெளியாக உள்ள நிலையில், அனிருத் ஃபர்ஸ்ட் சிங்கிளை இந்த வாரம் களம் இறக்கி ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த காத்திருக்கிறார்.

ஏற்கனவே, டி. ராஜேந்திரன் குரலில் வெளியான ஜிகிடு வைப்ஸ் பாடல் கல்யாண வீடுகளில் கூட வரவேற்பு பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த பாடல் தான் முதலில் வெளியாக உள்ளதாகவும் அதற்காக அனிருத் மற்றும் டி. ராஜேந்திரன் இணைந்து ப்ரோமோ வீடியோ ஒன்றையும் தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாகார்ஜுனா தீவிர புரமோஷன்: வரும் ஜூன் 20ம் தேதி தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்காக தனுஷை விட அதிக அளவில் யூடியூப் சேனல்களுக்கு நாகார்ஜுனா பேட்டி அளித்து வருகிறார். கூடவே கூலி படம் குறித்த கேள்விகளுக்கும் அவர் ஏகப்பட்ட அப்டேட்களை அள்ளி தெளித்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களையும் ஹேப்பி ஆக்கியுள்ளார்.
தமிழில் நாகார்ஜுனா: 1997 ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் நாகார்ஜுனா. அந்த படத்தில் இடம் பெற்ற சோனியா சோனியா பாடல் இன்றளவும் ஏகப்பட்ட ரசிகர்களின் பாடல்களில் ஒன்றாக உள்ளது. அதன் பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான பயணம் மற்றும் தோழா உள்ளிட்ட படங்களில் நடித்த நாகார்ஜுனா இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார். தனுஷ் உடன் குபேரா மற்றும் ரஜினிகாந்த் உடன் கூலி படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த இரு படங்கள் குறித்தும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா பேசி வருவதை கேட்கவே சுவாரசியமாக உள்ளதாக ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
கெத்துக் காட்டிய லோகேஷ்: கூலி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்றும் அதற்கு உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால், இப்போதே சொல்லி விடுங்கள் ஒரு கப் காபியை குடித்துவிட்டு இங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறேன் என லோகேஷ் கனகராஜ் தன்னை பார்த்ததும் கூறினார். நெகட்டிவ் ரோல் செய்ய மாட்டேன் என நான் ஒருபோதும் சொன்னது இல்லை என்று கூறிவிட்டு, அவரிடம் கதையை கேட்டேன். முதல் பாதி முழுவதுமாக அவர் கதையை சொல்லும் போதே, 6, 7 முறை கதையை நெருகேற்றி சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்த நிலையில், கூலி படத்தில் நடித்த சம்மதம் தெரிவித்தேன் என்றார்.
இதைவிட மோசமாக இருக்கிறார்கள்: கூலி படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கேட்கும் போது, மனிதர்கள் இவ்வளவு மோசமாகவா இருக்கின்றனர் என்கிற கேள்வியை எழுப்பினேன். அதற்கு லோகேஷ் கனகராஜ், இதை விட ஈவிளாக உள்ளனர் சார் என்றார். அவருடைய கதை சொல்லும் பாணி மற்றும் படமாக்கும் விதத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என்றார். தனுஷின் குபேரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி படங்களில் நாகார்ஜுனா இருப்பதே மிகப்பெரிய பலம் தான் என்றும் அவரது ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் தரமான சம்பவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











