தாத்தாவே நடிக்க சொன்னது போல உணர்வு.. அதனால் நடித்தேன்..பிஜேஸ் பேட்டி!

Recommended Video

Server Sundharam Audio Launch | Santhanam | Santhosh Narayanan | Filmibeat Tamil

சென்னை : சர்வர் சுந்தரம் படத்தில் தாத்தாவே என்னை நடிக்க சொன்னது போல ஒரு உணர்வு இருந்தது என்று நாகேஷின் பேரன் பிஜேஸ் கூறியுள்ளார்.

நடிகர் நாகேஷ் தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் அவரின் பேரன் அவர் பட தலைப்பு உள்ள படத்திலே நடித்து சினிமாவில் அறிமுகமாவது மிக பெரிய விசயமாகும். பல தடைகளை தாண்டி சர்வர் சுந்தரம் படம் ஜனவரி 31 வெளியாக உள்ளது.

Nagesh‘s gradson bijesh interview

பிஜேஸ் நாகேஷ் இந்த படத்தில் இரண்டாம் நாயகனாக நடித்திருக்கிறார். பிஜேஸ் இந்த படத்தில் கிராமத்தில் இருந்து சிறந்த அளவில் சமைக்க தெரிந்த ஒருவன் சென்னைக்கு வந்து படித்து சமையலில் பெரிய ஆளாக ஆக வேண்டும் என எண்ணி சமையலுக்கு படிக்கிறார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் சந்தானம் மற்றும் அடிதாங்கி வினோத் காமெடி காட்சிகளில் கலக்கி இருப்பதாகவும், பிஜேஸ், சந்தானத்தின் நல்ல நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இயல்பில் பிஜேஸ் நாகேஷ் எழுத்தாளர், அவர் எழுத்தில் பிஸியாக இருக்கும் போது தான் சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்க அழைத்து இருக்கிறார் பால்கி. பிஜேஸின் இயல்பு நாகேஷை ஞாபகப்படுத்துவதாக இருப்பதால் எந்த வித நிபந்தனையும் இன்றி படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கபட்டு இருக்கிறார் பிஜேஸ்.

Nagesh‘s gradson bijesh interview

முதலில் தயங்கிய பிஜேஸ் படத்தின் தலைப்பு கேட்டதும் இது நம்ம தாத்தா நாகேஷ் நடிக்க சொன்னது போல ஒரு உணர்வு இருந்தது அதனால் கட்டாயம் நடிக்கலாம் என எண்ணி இந்த படத்தில் நடித்தேன் என சமீபத்தில் கூறியிருந்தார் .

இந்த படத்தில் இயக்குனர் ஆனந்த் பால்கி நல்ல முறையில் பிஜேஸை பார்த்து கொண்டாராம். பிஜேஸ்க்கு எந்த இடையூறும் இன்றி படப்பிடிப்பின் போது எந்த தொல்லையும் இல்லாமல் என்னை நன்றாக இயக்குனர் பார்த்து கொண்டார் என பிஜேஸ் கூறியிருந்தார்.

Nagesh‘s gradson bijesh interview

மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு பதற்றம் அதிகமாக இருந்தது. ஏனெனில் நாகேஷின் பேரன் என்பதால் எதிர்பார்ப்புகள் இருக்கும் அதனை எவ்வாறு பூர்த்தி செய்வோம் எப்படி என்ற பதற்றம் தனக்கு படப்பிடிப்பின் போது இருந்ததாக பிஜேஸ் கூறியிருந்தார் .

சர்வர் சுந்தரம் படம் இரண்டு வருடத்திற்கு மேல் கிடப்பில் இருந்து தற்போது வந்தாலும் இந்த படம் கட்டாயம் புதுசு போலத்தான் இருக்கும் கட்டாயம் பழசாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் பிஜேஸ் நாகேஷ் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X