For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விரக்தியில் நக்மா! என்னையும், போஜ்பூரி நடிகர் ரவி கிஷனையும் இணைத்து வரும் வதந்திகளால்எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது என்று புலம்புகிறார் நக்மா. நக்மாவும் சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல. தமிழ் சினிமாவில்நக்மா நடித்துக் கொண்டிருந்தபோது கார்த்திக்குடன் முதலில் கிசுகிசுக்கப்பட்டார்.பின்னர் சரத்குமாரை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது.சரத்குமாருடன் மிக நெருங்கிப் பழகிய நக்மா திடீரென மும்பைக்கு ஓடிப் போனார்.அத்தோடு சரி, அதன் பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவே இல்லை. அஜீத்தான் ஆதரவு காட்டி மீண்டும் சென்னைக்கு கூட்டி வந்த தீனா, சிட்டிசன் ஆகியஇரண்டு படங்களில் நடிக்க வைத்தார்.தமிழை விட்டு விட்டுப் போன நக்மா, கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் சில காலம்சுற்றினார். ஆனால் இந்த நட்பு கொஞ்ச காலத்தில் மறைந்து போனது.பின்னர் மும்பை தாதாவுடன் நக்மாவுக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக செய்திகள்வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த பரபரப்பு அடங்கிய நிலையில்போஜ்பூரி நடிகர் ரவிகிஷனுடன் நக்மா காதல் கொண்டுள்ளதாக சில காலமாகவேசெய்தி உலா வருகிறது.ஆனால், இதுகுறித்து நக்மாவிடம் கேட்டால் விரக்தியாக புலம்புகிறார்.இப்படிக் கேட்பவர்களுக்கு மறுப்பு தெரிவித்துக கொண்டிருப்பதை விட இருவரும்கொஞ்ச நாள் சேர்ந்து நடிக்காமலேயே இருக்கலாம் போலிருக்கிறது. நாங்கள்இருவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள். ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளால் இந்தநட்பு கெட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன் என்கிறார்.நக்மா இப்போது முன்னாள் நடிகை சாய்ரா பானு தயாரிக்கும் ஆப் தா பாஞ்சா சஜ்னவாஹமார் என்ற போஜ்பூரி படத்தில் நடித்து முடித்துள்ளார்.என்னைப் பொறுத்தவரை திருமணத்திற்குப் பிறகும் நடிக்க விரும்புகிறேன் என்றுசொல்லும் நக்மா, நல்ல படங்களை எந்த வயதிலும் நடிக்கலாம் என்கிறார்.தங்கை ஜோதிகா இனிமேல் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளாரே என்றுவருத்தப்பட்டபோது, ஜோதிகா அப்படி சொல்லவில்லை. இப்போதைக்கு நடிக்கமாட்டேன் என்றுதான் கூறியுள்ளார். எதிர்காலத்தில் நடிக்க வரலாம், யார் கண்டதுஎன்று விளக்ம் தந்தார் நக்மா.ஜோதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, சரத்குமார் தனது மனைவிராதிகாவோடு வந்து வாழ்த்தியபோது பிரகாசமான முகத்துடன் ராதிகாவுக்கு அருகில்நின்று கொண்டார் நக்மா. அதை பார்த்த புகைப்படக்காரர்கள் சூடாக சுட்டுத் தள்ளினர்.ஆனால் சரத் தான் நக்மா இருந்த பக்கம் திரும்பக் கூட இல்லை.சரி நக்மா உங்களுக்கும், வதந்திகளுக்கும் ஏன் இப்படி ஒட்டுறவு, அடிக்கடிசிக்குகிறீர்களே?நல்ல மனம் படைத்தவர்கள் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்ப மாட்டார்கள்.கெட்ட புத்தி உடையவர்களின் வேலைகள்தான் இவை. எனவே இவை குறித்து நானகவலைப்பட்டதே இல்லை.இதையெல்லாம் புறக்கணித்து விட்டு நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவில் சாதித்தாகி விட்டது. அடுத்து டிவியிலும்நடிக்கவுள்ளேன். அமீர்கானுடன் நடிக்க ஆசையாக உள்ளேன்.நக்மா இப்போது போஜ்பூரி படங்களில்தான் அதிகம் நடித்துக் கொண்டிருக்கிறார்என்பது தான் உங்களுக்குத் தெரியுமே.

  By Staff
  |

  என்னையும், போஜ்பூரி நடிகர் ரவி கிஷனையும் இணைத்து வரும் வதந்திகளால்எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது என்று புலம்புகிறார் நக்மா.

  நக்மாவும் சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல. தமிழ் சினிமாவில்நக்மா நடித்துக் கொண்டிருந்தபோது கார்த்திக்குடன் முதலில் கிசுகிசுக்கப்பட்டார்.பின்னர் சரத்குமாரை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது.

  சரத்குமாருடன் மிக நெருங்கிப் பழகிய நக்மா திடீரென மும்பைக்கு ஓடிப் போனார்.அத்தோடு சரி, அதன் பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவே இல்லை. அஜீத்தான் ஆதரவு காட்டி மீண்டும் சென்னைக்கு கூட்டி வந்த தீனா, சிட்டிசன் ஆகியஇரண்டு படங்களில் நடிக்க வைத்தார்.

  தமிழை விட்டு விட்டுப் போன நக்மா, கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் சில காலம்சுற்றினார். ஆனால் இந்த நட்பு கொஞ்ச காலத்தில் மறைந்து போனது.

  பின்னர் மும்பை தாதாவுடன் நக்மாவுக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக செய்திகள்வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த பரபரப்பு அடங்கிய நிலையில்போஜ்பூரி நடிகர் ரவிகிஷனுடன் நக்மா காதல் கொண்டுள்ளதாக சில காலமாகவேசெய்தி உலா வருகிறது.

  ஆனால், இதுகுறித்து நக்மாவிடம் கேட்டால் விரக்தியாக புலம்புகிறார்.

  இப்படிக் கேட்பவர்களுக்கு மறுப்பு தெரிவித்துக கொண்டிருப்பதை விட இருவரும்கொஞ்ச நாள் சேர்ந்து நடிக்காமலேயே இருக்கலாம் போலிருக்கிறது. நாங்கள்இருவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள். ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளால் இந்தநட்பு கெட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன் என்கிறார்.

  நக்மா இப்போது முன்னாள் நடிகை சாய்ரா பானு தயாரிக்கும் ஆப் தா பாஞ்சா சஜ்னவாஹமார் என்ற போஜ்பூரி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

  என்னைப் பொறுத்தவரை திருமணத்திற்குப் பிறகும் நடிக்க விரும்புகிறேன் என்றுசொல்லும் நக்மா, நல்ல படங்களை எந்த வயதிலும் நடிக்கலாம் என்கிறார்.

  தங்கை ஜோதிகா இனிமேல் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளாரே என்றுவருத்தப்பட்டபோது, ஜோதிகா அப்படி சொல்லவில்லை. இப்போதைக்கு நடிக்கமாட்டேன் என்றுதான் கூறியுள்ளார். எதிர்காலத்தில் நடிக்க வரலாம், யார் கண்டதுஎன்று விளக்ம் தந்தார் நக்மா.

  ஜோதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, சரத்குமார் தனது மனைவிராதிகாவோடு வந்து வாழ்த்தியபோது பிரகாசமான முகத்துடன் ராதிகாவுக்கு அருகில்நின்று கொண்டார் நக்மா. அதை பார்த்த புகைப்படக்காரர்கள் சூடாக சுட்டுத் தள்ளினர்.ஆனால் சரத் தான் நக்மா இருந்த பக்கம் திரும்பக் கூட இல்லை.

  சரி நக்மா உங்களுக்கும், வதந்திகளுக்கும் ஏன் இப்படி ஒட்டுறவு, அடிக்கடிசிக்குகிறீர்களே?

  நல்ல மனம் படைத்தவர்கள் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்ப மாட்டார்கள்.கெட்ட புத்தி உடையவர்களின் வேலைகள்தான் இவை. எனவே இவை குறித்து நானகவலைப்பட்டதே இல்லை.

  இதையெல்லாம் புறக்கணித்து விட்டு நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவில் சாதித்தாகி விட்டது. அடுத்து டிவியிலும்நடிக்கவுள்ளேன். அமீர்கானுடன் நடிக்க ஆசையாக உள்ளேன்.

  நக்மா இப்போது போஜ்பூரி படங்களில்தான் அதிகம் நடித்துக் கொண்டிருக்கிறார்என்பது தான் உங்களுக்குத் தெரியுமே.

  Read more about: nagma fedup with gossips
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X