விஜய்சேதுபதி எங்களுக்கு கிடைத்த சொத்து..இயக்குனர் நலன் குமாரசாமி பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் நலன் குமாரசாமி.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ள குட்டி ஸ்டோரி படத்தில் ஒரு பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார், அது குறித்து ஃபில்மி பீட் தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

முன்னனி இயக்குனர்கள்
காதலர்கள் தினத்தை முன்னிட்டு நாளை குட்டி ஸ்டோரி திரைப்படம் வெளிவரவுள்ளது. நளன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு, கவுதம் மேனன் என முன்னணி இயக்குனர்கள் ஒன்றிணைந்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஆண் - பெண்ணின் உறவு
இருவருக்கும் இடையில் உள்ள உறவு ஆடலும் பாடலும் நிறைந்தது அதை பிரதிபலிக்கும் வகையில் தான் "ஆடல் பாடல்" என தலைப்பு வைத்ததாக கூறியுள்ளார். ஆண் - பெண் உறவில் நடக்கும் கல்யாணம் குறித்த கதையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

எங்கள் சொத்து
எதிர்காலத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு, விஜய்சேதுபதி எங்களுடைய சொத்து எனவும், கண்டிப்பாக எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து நிறைய படங்கள் பணியாற்றுவோம் என பதிலளித்தார்.

ஸ்டாண்டார்ட் பெர்பாஃமன்ஸ்
இந்த படத்தில் நடிக்க அதிதி பாலனை தேர்வு செய்தமைக்கு காரணம் என்னவென்ற கேள்விக்கு, அருவி படத்தில் அதிதியின் ஸ்டாண்டார்ட் பெர்பாஃமன்ஸ் தான் காரணம் எனவும், இந்த படத்தில் மிகவும் கூலாக நடித்து சிறப்பித்துள்ளார் எனவும் பதிலளித்தார் நலன் குமாரசாமி.


Click it and Unblock the Notifications











