நளினிக்காக சூட்டிங் லொகேஷனை மாற்றிய சுந்தர் சி... நெகிழ்ந்த நடிகை!

சென்னை : நடிகை நளினி, தமிழில் ரசிகர்களை கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் சின்னத்திரை பக்கம் தனது பார்வை மற்றும் பயணத்தை திருப்பிய அவர், தொடர்ந்து தற்போது சிறப்பான சீரியல் நடிகை மற்றும் ஷோக்களின் நடுவர் என்று பிசியாக காணப்படுகிறார்.

Recommended Video

London Movie எனக்காக சுந்தர்.C சென்னையில ஷூட் பண்ணினாரு!| Actress Nalini | colors Tamil | filmibeat

80களின் கனவுக்கன்னி

80களின் கனவுக்கன்னி

80களில் நடிகை நளினி சினிமாவில் நாயகியாக பல படங்களில் நடித்தவர். ரசிகர்களை தன்னுடைய நடிப்பு மற்றும் அழகால் கவர்ந்தவர். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர் ராமராஜனை திருமணம் செய்து செட்டில் ஆன நளினி, அவரை பிரிந்து தற்போது சினிமாவில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சவாலான டான்ஸ்

சவாலான டான்ஸ்

இவருடைய அப்பா பிரபல டான்ஸ் மாஸ்டர் என்றாலும் இவருக்கு சினிமாவில் மிகவும் சவாலாக இருந்தது டான்ஸ்தான் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது சின்னத்திரையில் இவருக்கு கைக்கொடுத்தது கிருஷ்ணதாசி சீரியல். இந்த சீரியலில் தன்னுடைய இயல்பை மீறி போல்டான கேரக்டரில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

காமெடி ட்ராக்கிற்கு மாற்றிய ராதிகா

காமெடி ட்ராக்கிற்கு மாற்றிய ராதிகா

பிலிமிபீட்டிற்காக நளினி அளித்துள்ள பேட்டியில், தன்னை காமெடி ட்ராக்கிற்கு மாற்றியது ராதிகா தான் என்றும், தான் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடிக்க தயங்கியபோது அவர்தான் தன்னை ஊக்குவித்து அந்த தொடரில் நடிக்க வைத்து தன்னுடைய பயணத்தை மாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

காமெடி கேரக்டர்கள்

காமெடி கேரக்டர்கள்

இந்த சீரியலில் தன்னுடைய கேரக்டர் மிகவும் பேசப்பட்டதாகவும் தொடர்ந்து பெரிய திரையிலும் காமெடி கேரக்டர்களை தான் ஏற்று நடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். லண்டன் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க தான் முதலில் தயங்கியதாகவும் ஆனால் சுந்தர் சி தன்னால் முடியும் என்று தன்னை அந்தக் கேரக்டரை செய்ய வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் முழுக்க முழுக்க லண்டனிலேயே நடந்த நிலையில் தன்னுடைய குழந்தைகளை விட்டு அவுட்டோர் செல்ல முடியாத நிலையில், சென்னையிலேயே தன்னுடைய போர்ஷனை சுந்தர் சி நடத்தியதாக நளினி பாராட்டு தெரிவித்துள்ளார். தான் அந்த கேரக்டரில் இயல்பாக நடித்தது குறித்து வடிவேலுவும் பாராட்டியதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X