»   »  நமீதாவின் தன்னம்பிக்கை!

நமீதாவின் தன்னம்பிக்கை!

Subscribe to Oneindia Tamil

நான் நடிக்கும் படத்தில் எத்தனை ஹீரோயின் நடித்தாலும் எனக்குக் கவலையில்லை. என் மீதும், எனதுரசிகர்கள் மீதும் அபார நம்பிக்கை உள்ளது என்று படு தன்னம்பிக்கையாக சொல்கிறார் எம்.ஆர்.எப் நமீதா.

வியாபாரியில், தமன்னா, மாளவிகா ஆகியோருடன் சேர்ந்து செமத்தியான திறமை காட்டி வரும் நமீதா, அடுத்துவிஜய் படத்தில் ஷ்ரியாவுக்கு போட்டியாக முறுக்க உள்ளார்.

அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள். ஒருவர் சிவாஜி நாயகி ஷ்ரியா. 2வது நாயகி நமீதா.இப்படத்தை பரதன் இயக்குகிறார். வாட்டமான திரிஷா, ஆசின் போன்றவர்களை விட்டு விட்டு புதியடிராக்குக்கு இளைய தளபதி மாறியுள்ளார்.

அதிலும், எல்.ஓ.சி.யே இல்லாத நமீதாவை ஜோடியாக போட்டிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது. இதே ஆச்சரியத்தில்தான் நமீதாவும் உள்ளார். விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என ஆர்வமாக இருந்தவருக்கு ஜோடி போடும் ஜோரான வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாகஇருக்காதா என்ன.!

என்னதான் இருந்தாலும் நீங்க செகண்ட்ஸ்தானே என்று நமீதாவிடம் கேட்டால், எத்தானவதாக இருந்தால்என்ன, என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது ரசிகர்கள் மீது நம்பிக்கை என்று தன்னம்பிக்கையாகசொல்கிறார்.

எல்லோருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கும்உள்ளது. இப்போது விஜய்யுடன் கிடைத்துள்ளது. இது போதாதா?

கூட எத்தனை ஹீரோயின் நடித்தாலும் எனது பாணியில் பின்னிட மாட்டேன்? எனக்குத் தரப்படும் கேரக்டரைசிறப்பாக செய்வேன். ஸோ, நோ பிராப்ளம் என்கிறார் நமீதா.

நமீதா இப்போது சூப்பரான ஒரு வேலையை உருப்படியாக செய்து வருகிறாராம். அதாவது காலையில்எழுந்ததும், யோகாவில் உட்கார்ந்து விடுகிறாராம். எல்லாம் மன அமைதிக்காகவாம்.

அதானே, உலக அமைதிக்காகவோ என்று நினைத்தோம்!

Please Wait while comments are loading...