»   »  மாயா மாயா.. நமீதா!

மாயா மாயா.. நமீதா!

Subscribe to Oneindia Tamil

நான் நடித்துள்ள மாயா படு சூப்பராக வந்துள்ளது. அதேபோல அழகிய தமிழ் மகனில் விஜய்யுடன் நடிக்கும்அனுபவமும் படு சூப்பராக உள்ளது என்று சிலாகிக்கிறார் ஜில்வண்டு நமீதா.

கிளாமர் தக்காளி நமீதா கொஞ்ச காலத்துக்கு முன்பு நடிக்க ஒப்புக் கொண்ட படம் மாயா. இது ஆங்கிலத்தில்தயாரிக்கப்பட்டுள்ள படம். நமீதாவின் வாகுக்கேற்ப படு கிளாமராக இந்தப் படத்தில் அவரது கேரக்டரைஅமைத்திருந்தார்கள்.

படம் முடிந்து விட்டதாம். ஆனால் போணி ஆகாமல், படுத்துக் கிடக்கிறதாம். தான் நடித்த முதல் ஆங்கிலப்படமே படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதால் அப்செட் ஆகியுள்ளார்நமீதா.

அப்படியா என்று நமீதாவை குந்த வைத்து குசலம் விசாரித்தோம். அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லப்பாஎன்று நமது கவலையைப் போக்கினார் நமீதா.

படம் படு சிறப்பாக வந்திருக்கிறது. பெரிய அளவில் இந்தப் படம் பேசப்பட வேண்டும். தேசிய அளவில்மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் கூட கலக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் விரும்புகிறார்.

சர்வதேச அளவில் நடைபெறும் பட விழாக்களில் மாயாவை உலாவ விட்டு புகழைத் தேடும் ஆர்வத்தில்இருக்கிறார்கள். இந்த நேரம் போய் இப்படிக் கேட்டு விட்டீர்களே என்று விசனப்பட்டார் நமீதா.

அப்படீன்னா படம் ஏன் வரவில்லை ஆத்தா??

விளம்பரத்தை பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறார்கள். அதனால்தான் தாமதம். வேறு ஒரு பிரச்சினையும்இல்லை என்று வெவரமாக வெளக்கினார் நமீதா.

விஜய்யுடன் அனுபவம் எப்படி?

அழகிய தமிழ் மகன் படத்தை கேட்கிறீங்களா? அது ஒரு மகா அனுபவம். படு சூப்பராக இருக்கிறது. விஜய்ரொம்ப பிரண்ட்லியாக பழகுகிறார்.

விஜய்யுடன் நான் நடித்த காட்சிகளை 15ம் தேதி சுட்டுள்ளார்கள். இப்படம் எனக்கு பெரிய டர்னிங்பாயிண்ட்டைக் கொடுக்கும் பாருங்களேன்.

அப்புறம், நான் அவன் இல்லை, வியாபாரி என நிறைய படங்கள் இருக்கு சார். அப்படியே ஒரு கன்னடப்படத்திலும் நடித்துள்ளேன் என்றார் நமீதா.

வியாபாரி படத்துல, உங்களுக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் பஞ்சாயத்து ஏதும் வரலையா நமீதா?

Read more about: actress namithas maya over

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil