கிளாமர்னா நான்தான்... எனக்கு ஆல்டர்நேட் கிடையாது! - நமீதா
தமிழ் சினிமாவில் கிளாமர் என்றால் அது நான்தான். எனக்கு ஆல்டர்நேட் கிடையாது என்கிறார் நமீதா.
கொஞ்சநாள் மும்பையில் தனது கட்டுமான நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்த நமீதா, மீண்டும் சென்னை திரும்பிவிட்டார். இங்கே உள்ள அவரது சொந்த வீட்டில் தங்கி, அடுத்த ரவுண்ட் வாய்ப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "'தி டர்ட்டி பிக்சர்" படத்துல சில்க் கேரக்டருக்கு வித்யாபாலன் தப்பு சாய்ஸ்னு சொல்வேன். 'அந்த கேரக்டருக்கு நீதான் ஃபிட்"னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிச்சு. யோசிச்சா அதுதான் கரெக்ட். தமிழ்ல அந்தப் படத்தை யாராச்சும் எடுத்தா... நான் சூப்பர் கிளாமரா நடிப்பேன்.
என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான். எனக்கு யாரும் ஆல்டர்னேட்டிவ் கிடையாது!'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











