கருப்பா, ஒசரமா மாப்பிள்ளை கிடைச்சா கட்டிக்குவேன்... நமீதா

By Sudha

எனக்கு எங்க அப்பா, அம்மாதான் மாப்பிள்ளை பார்ப்பாங்க. கருப்பா இருந்தாலும் பரவாயில்லை, உயரமாக இருக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட மாப்பிள்ளை இருந்தா கல்யாணம் செய்துக்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளார் நமீதா.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவின் இரு பெரும் திரையுலகிலும், ஓங்கு தாங்காக வலம் வந்தவர் உயர்ந்த நடிகை நமீதா. இப்போது அவ்வளவாக படம் இல்லை. இடையில் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் குதித்தார்.

இந்த நிலையில், என்னதான் செய்றீங்க நமீதா, ஆளையே காணோம் என்று அவரிடம் கேட்டால், பில்லா படத்தில் நடித்தது போல நடிக்க மாட்டீங்களா என்று எல்லோரும் கேட்கிறார்கள். நிச்சயம் அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.

நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்து விட்டால் அடுத்து கல்யாணம்தானே. உங்களுக்கு எப்ப கல்யாணம் என்று கேட்டால், அதெல்லாம் எங்க அப்பா, அம்மாவுடைய வேலை. அவர்கள்தான் பார்ப்பார்கள். எப்போது கல்யாணம் என்று கூற முடியாது. பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் நடக்கும் என்ற நமீதா தனக்கு வர வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

எனது உயரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவே எனது மாப்பிள்ளையும் உயரமாக இருக்க வேண்டியது அவசியம். கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை, களையாக இருந்தால் போதும். பழக இனிமையானவராக இருக்க வேண்டும். இவ்வளவுதான் எனது எதிர்பார்ப்பு. அப்புறம் பிசினஸ்மேனாக இருக்க வேண்டியது அவசியமாம், அதையும் சொன்னார் நமீதா.

யாராச்சும் நமீதா ரேஞ்சுக்கு இருந்தா அவங்க மம்மி, டாடிக்கு ஜாதகத்தை அனுப்பி வைச்சுப் பாருங்களேன்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X