எனக்கு டைவர்ஸா?.. விஜய்யோட அந்த பாட்டுல ரொம்பவே பயந்தேன்.. அஜித்தை அப்புறம் பார்க்கல.. நமிதா பேட்டி!
சென்னை: நடிகை நமிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த அனுபவத்தையும் அஜித்துடன் பில்லா படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், தனக்கு விவாகரத்து என கிளம்பிய வதந்தி குறித்தும் வெளிப்படையாக பேசி சிரித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை நமிதா. மும்தாஜ் இருந்த இடத்தை அப்படியே நமிதாவின் வரவு பிடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களில் படு கவர்ச்சியாகவும் நடிப்பில் தனக்கே உரித்தான க்யூட்னஸ் உடன் நமிதா நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பப்ளியாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நமிதாவை ரொம்பவே பிடிக்கும். சமீப காலமாக சினிமாவை விடுத்து அரசியலில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
பில்லாவுக்கு பிறகு: பில்லா படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிகர் அஜித் குமாரை பார்த்ததே இல்லை. அதேபோல பில்லா படம் முடிந்த பின்னரும் அஜித் குமாரை சந்திக்கவில்லை என நடிகை நமிதா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அஜித்குமார் போலத்தான் நானும் ரொம்பவே பிஸியாக இருப்பேன். யாரிடமும் சரியாக பேசக் கூட மாட்டேன். அதனால், எனக்கு ரொம்ப ஆட்டிட்யூட் எனக் கூறுவார்கள் என பேசியுள்ளார்.
விஜய்யுடன் அந்த பாடலில் நடிக்க பயந்தேன்: அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் நமிதா நடித்திருப்பார்கள். "சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா"பாடலுக்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தீவுக்கு சென்றோம். ஸ்பீட் போட்டில் அழைத்துச் சென்றனர். முதலில் நேராக சென்றுக் கொண்டிருந்த போட் ஒரு கட்டத்துக்கு மேல் செங்குத்தாக செல்ல ஆரம்பித்ததும் பயந்து நடுங்கி ஹனுமான் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். அந்த பாடலின் போது அந்த தீவில் நடனமாடவே ரொம்பவே பயந்தேன் என நமிதா கூறியுள்ளார்.

எனக்கு டைவர்ஸா?: திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து திடீரென எனக்கும் கணவருக்கும் டைவர்ஸ் என செய்திகள் வெளியானது. நானும் என் கணவரும் அதை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டிருந்தோம். பிரஸ் மற்றும் நண்பர்கள் போன் அடிச்சு விசாரிக்கிறாங்க, இத்தனைக்கும் சில நாட்கள் முன்னர் தான் பொங்கல் கொண்டாடிய போட்டோக்களை எல்லாம் போட்டிருந்தேன். அதில், நானும் கணவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். ஆனால், எப்படி இப்படி கிளப்பி விடுறாங்கன்னு தெரியலையே என யோசித்து சிரித்தோம் என தனக்கு ஏற்பட்ட விவாகரத்து வதந்தி பிரச்சனை குறித்தும் அசால்ட்டாக பேசியுள்ளார் நமிதா.
நமிதா குடும்பம்: 43 வயதாகும் நடிகை நமிதா விரேந்திரா சவுத்ரி என்பவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகளை நடிகை நமிதா பெற்றுக் கொண்டார். 2020ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் நமிதா மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில யூடியூப் சேனல்களுக்கு தீவிரமாக பேட்டிகளை அளித்து வருவதற்கு பின்னணியிலும் மீண்டும் நமிதா நடிக்க வருவது தான் காரணம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











