விஜய்க்கு அந்த அறிவு கூட இல்லையா? மே 4ந் தேதி என்ன ஆகப்போகுதோ? தற்குறிகளை நினைச்சா பயமா இருக்கு?
சென்னை: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், விழிப்புணர்வு வீடியோ வெளியிட வேண்டும் என நந்தவனம் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார். விஜய் ரசிகர்களின் அதீத ஈடுபாடு குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளப்பிய நிலையில், ரசிகர்கள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வேண்டுகோள்: நந்தவனம் நந்தகுமார் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீங்க எந்த அளவுக்கு விஜய்யை விரும்புகிறீர்கள் என்று உங்களுடைய ரீல்ஸ் வீடியோவை பார்க்கும் போதே நன்றாக தெரிகிறது. சில பெண்கள் என் குழந்தையை கொன்று விடுவேன், நானும் தற்கொலை செய்து கொள்வேன், என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் விஷம் வைத்து விடுவேன். இப்படியெல்லாம் சொல்கிறார்கள். நீங்கள் இப்படி சொல்வதற்கு காரணம் விஜய் மீது அவர்கள் அதீத அன்பு வைத்திருப்பது தான். நீங்கள் மிகவும் அதிகமாக விஜய்யை நேசிக்கிறீர்கள். நீங்கள் நேசிக்கும் அளவிற்கு விஜய் உங்களை நேசிக்கிறாரா? கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவருக்கு உங்கள் மேல் அக்கறையாக இருந்தால், எனக்காக உயிர் கொடுக்க கூடாது என்று உங்களை அழைத்து சொல்லி இருக்க வேண்டும், உங்களை அழைத்து சொல்ல முடியவில்லை என்றால் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கலாம்? ஆனால் விஜய் எதையுமே செய்யவில்லை.

அந்த அறிவுகூட இல்லையா: மிஸ்டர் விஜய் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் உங்களை நேசித்தவர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். அவர்களுக்காக, அவர்களின் நலனுக்காக, அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், உங்களுக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட வேண்டும் என்ற அறிவு கூடவா இல்லை. விஜய் தோற்றுவிட்டார் என்ற செய்தி வெளியானதும் அந்தக் கூட்டம் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. வீட்டில் இருக்கும் நபர்களையே, விஜய் தோற்றதுக்கு காரணம் இவர்கள் தான் என சொல்லி வயதான தாத்தா பாட்டிகளை எல்லாம் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
பாதுகாப்பாக இருங்கள்: தயவு செய்து அனைவரும் பத்திரமாக இருங்கள். மே 4ந் தேதி வாக்கு எண்ணும் போது, தாத்தா பாட்டிகள் அறையில் பாத்திரமாக இருங்கள். அப்படியே ஏதாவது அசம்பாவிதம் அடக்க ஆரம்பித்தால், 100க்கு போன் செய்யுங்கள் என நந்தவனம் நந்தகுமார் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். பலரும் இந்த வீடியோவை ஆதரித்து வரும் நிலையின், விஜய்யின் ரசிகர்கள் இவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications