விஜய் திருச்செந்தூரில் ‘சத்ரு சம்ஹார யாகம்‘ ஏன் செய்தார் தெரியுமா? பிரபலம்!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கடலில் இறங்கி வாழிபாடு செய்த விஜய் முருகப்பெருமானை தரிசனம் செய்து மனமுருகி வேண்டினார். விஜய்க்கு கோவில் நிர்வாகம் பாரம்பரிய மரியாதையுடன் வேல் வழங்கி கௌரவித்தது. இந்த கோவிலில் விஜய் 'சத்ரு சம்ஹார யாகம்' செய்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து நந்தவனம் நந்தகுமார் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சத்ரு சம்ஹார யாகம்: அதில், விஜய் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று 'சத்ரு சம்ஹார யாகம்' செய்து இருக்கிறார். சத்ரு சமகாரா யாகம் என்றால் எதிரியை அழிக்கும் யாகம். இதில் சத்ருவாக விஜய் யாரை நினைக்கிறார். ஐயா மு.க.ஸ்டாலினா? என்னைப் போல நிறைய பேர் youtube-இல் அவரை எதிர்த்து பேசி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களா? இல்லை விஜய் பல படங்களில் நடித்திருக்கிறார் அந்த படங்களில் நடித்த வில்லன்களா? இல்லை கரூரில் 41 பேர் உயிரிழந்தார்களே அவர்கள் ஆவியாக மாறி சுற்றிக்கொண்டு இருக்கிறார்களே அந்த சத்ருக்களா? இதில் எந்த சத்ருவை அழிப்பதற்காக விஜய் யாகம் செய்தார் என்பது பெரிய குழப்பமாகவே இருக்கிறது.

நந்தவனம் நந்தகுமார்: ஒரே ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா செய்யாத யாகமா, பூஜையா, பரிகாரமா, கடைசியில் என்ன ஆச்சு. முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள் பாவத்தை செய்துவிட்டு பரிகாரம் செய்வது சரியில்ல. கடவுள் நம்பிக்கை என்பது மனசாட்சி சம்பந்தப்பட்டது. நம்மளுடைய மனசுக்கு நாம் நேர்மையாக இருக்கிறோமா, உண்மையா இருக்கிறோமா என்பது தான். இந்த விஷயத்தி எல்லாம் அப்பா, அம்மா, வாத்தியார் சொல்லிக் கொடுத்து வராது. இதெல்லாம் மனதால் நாம் உணரவேண்டிய ஒன்று. இதுக்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை என நந்தவனம் நந்தகுமார் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் இவரை கடுமையாக திட்டி வருகின்றனர். இணையத்தில் அவரின் வீடியோ டிரெண்டாகி பேசுபொருளாகி வருகிறது.


Click it and Unblock the Notifications