40 கல்யாணம் டார்கெட்.. இளையராஜா பற்றி பேச வனிதாவிற்கு தகுதியே இல்ல.. கொந்தளித்த பிரபலம்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் 11ந் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், வனிதா, ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, ஆர்த்தி, பாத்திமா பாபு, கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைப்பில் உருவான ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வனிதா மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். அப்போது பேசிய வனிதா,நான் அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் பாடலை பயன்படுத்தினேன். அந்த குடும்பத்திற்கு மருமகளாக போக வேண்டியவள் நான், அந்த குடும்பத்திற்கான அவ்வளவு உழைத்து இருக்கிறேன் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் பேசு பொருளாகிய நிலையில், இதுபற்றி நந்தவனம் நந்தகுமார் பேசி உள்ளார்.

இதில், இளையராஜாவை வனிதா மட்டுமல்ல தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகில் எங்கெங்கெல்லாம் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்களோ. இளையராஜாவின் பாட்டை கேட்கிறார்களோ, அவர்கள் எல்லாம் அவரை காதலிப்பார்கள். அப்பவாகவோ, தாத்தாவாகவோ, காதலனாகவோ அவர் மீது தனிப்பட்ட காதல் இருக்கும். வேறு வழியே இல்லை நிம்மதியாக இரவில் தூங்க வேண்டும் என்றால் அவருடைய பாட்டு தான் அதற்கு தாலாட்டு.

vanitha vijayakumar ilayaraja
Photo Credit:

40 கல்யாணம்: நாளை முதலமைச்சராகக்கூடிய வருடன் வனிதா ஜோடியாக நடித்து இருக்கிறார். அந்த வீட்டிற்கு மருமகளாக போகும் வாய்ப்பு கிடைக்கவில்லையே. இளையராஜா வீட்டிற்கு மருமகளாக வேண்டியவள் என்று சொன்னதுமே மிகப்பெரிய அதிர்ச்சி, அதேபோல சந்திரசேகர் வீட்டிற்கும் மருமகளாக வேண்டியவள் என்று சொல்லிவிட்டால் திடீரென்று எங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து தப்பித்துக்கொள்வோம். வனிதா ஏற்கனவே சிவக்குமார் வீட்டிற்கு மருமகளா போக வேண்டியவள் என்று சொல்லிகிறார். இதுமட்டுமில்லாமல் 40 கல்யாணம் என்னுடைய டார்க்கெட் என்று சொல்லி இருக்கிறார். இப்போதுதான் நாலு கல்யாணம் நடந்து இருக்கு, அப்போது மீதி கல்யாணம் எப்போது நடக்கும் என்பதை வனிதா தெளிவாக சொல்லிவிட்டால் நல்லது.

பாவர் ரசிகர்கள்: நயன்தாரா, திரிஷா, குஷ்பூ போன்ற பல நடிகைகள் இருக்கிறார்கள். குஷ்பூவிற்கு கோயில் கட்டி கொண்டாடியவர்கள் ஏன் வனிதாவை விட்டுவிட்டார்கள் என்ற கேள்வி தான் என் மனதிற்குள் வருகிறது. காதலை வாரி வாரி கொடுக்க வனிதா இருக்கும்போது, ரசிகர்கள் வனிதாவை எப்படி மறந்தார்கள் என்று தான் தெரியவில்லை. வனிதா இப்படி சொல்லியதில் இருந்து பலரும் இளையராஜாவை தவறாக பேசி வருகிறார்கள். இளையராஜா, ஐயா அவர்கள் இந்த விஷயத்தில் சுத்த தங்கம்டா என்றுதான் சொல்ல வேண்டும். இசையைத் தவிர மற்ற எதையும் வெறுக்கக்கூடியவர் அவர். இசையை மட்டும் தான் அவர் விரும்பி இருக்கிறார். ஆனால், ஜேம்ஸ் வசந்த் போன்றவர்கள், அவரை மிகவும் மட்டமான மனிதர் என்று சொல்வதை கேட்கும் போது, என்னடா எப்படி எல்லாம் பேசுகிறார் என்றுத் தான் தோன்றும்.

தங்கமானவர்: வனிதா உண்மையிலேயே இளையராஜாவிடம் பாடலை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று அனுமதி கேட்டு இருந்தால், இளையராஜா ஏன் வழக்கு தொடரப்போகிறார். இப்படி எதுவுமே நடக்கவில்லை வனிதா மட்டும் தான், நான் அனுமதி கேட்டு விட்டேன் என்று சொல்கிறார் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. இது எல்லாமே தன்னுடைய படத்தின் பப்ளிசிட்டிக்காக வனிதா செய்த வேலை, இந்தப் பிரச்சனை குறித்து வனிதாவிடம் பலர் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் இது பற்றி யாராவது இளையராஜாவிடம் சென்று பேட்டி எடுத்து விட முடியுமா? யாருக்கும் அந்த தைரியமே இல்லை, ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பதை அவர் தானே சொல்ல வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X