»   »  ரகசியம் ஏதுமில்லை-நந்திதா

ரகசியம் ஏதுமில்லை-நந்திதா

Subscribe to Oneindia Tamil

நானும், ஒளிப்பதிவாளர் காசியும் ரகசியக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் இல்லை, பெரியோர்கள்ஆசிர்வாதத்துடன் தான் இந்த கல்யாணம் நடந்தது என்று நேற்று திடீரென கல்யாணம் செய்து கொண்ட நடிகை நந்திதா கூறியுள்ளார்.

ஈர நிலம் படத்தின் மூலம் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகமானவர் நந்திதா. பிரபல டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகள். முதல் படம்சுமாராக ஓடியும், பெரிய அளவில் பிரபலமாகவில்லை நந்திதா.

அப்படியும் இப்படியுமாக நடித்துக் கொண்டிருந்த நந்திதாவுக்கும், ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உதவியாளர் காசி விஸ்வநாத்துக்கும்இடையே காதல் ஏற்பட்டது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திடீரென நேற்று இருவரும் திருமணம்செய்து கொண்டனர்.

வடபழனி முருகன் கோவிலில் வைத்து கல்யாணம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் தங்களது கல்யாணம் ரகசியக் கல்யாணம் இல்லை என்றுநந்திதா தெரிவித்துள்ளார்.

காசியை மணந்தது குறித்து நந்திதா கூறுகையில், நாங்கள் முதலில் வடபழனியில் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, சென்னையை அடுத்துள்ளபடப்பையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்டோம்.

அடுத்து எங்களுடைய ரகசிய கல்யாணமும் இல்லை. இருவரது வீட்டுப் பெரியவர்களும் ஆசிர்வதித்துத்தான் கல்யாணம் நடந்தது. எங்களதுகாதலை இரு வீட்டாரும் முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

2005ம் ஆண்டுதான் முதன் முதலில் காசியை சந்தித்தேன். ஈசல் என்ற குறும்படத்தில் நடித்தேபாதுதான் இருவரும் அறிமுகமாகி நட்பு ஏற்பட்டுகாதலாக மாறியது. அவர்தான் காதலைச் சொன்னார், நான் மறுக்கவில்லை ஏற்றுக் கொண்டு விட்டேன்.

25 படங்களில் நடித்து விட்டேன். இப்போது கூட வசந்தம் வந்தாச்சு, காசு இருக்கணும் என சில படங்களில் நடித்துள்ளேன். கல்யாணமாகிவிட்டதால் இனி நடிக்க மாட்டேன் என்றார் நந்திதா.

நல்லா இருங்க!

Read more about: nandhitha not to act anymore

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil