மாதாவாக நந்திதா! கிளாமர் கிளியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஈர நிலம் நந்திதா முற்றிலும் புதியவேடத்தில், அதாவது வேளாங்கண்ணி மாதா வேடத்தில் நடிக்கப் போகிறார்.பாரதிராஜாவின் கையால் குட்டுப்பட்டும் போணியாகாத வெகு சில நடிகைகளில்நந்திதாவும் ஒருவர். எடுப்பான தோற்றம் கொண்டவராக இருந்தும் எடுபடாமல்போன நந்திதாவுக்கு இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது.நிறைய படங்கள் கிடைத்து வருகின்றன. வசந்தம் வந்தாச்சு, இம்சை அரசன் 23ம்புலிகேசி (இதில் வடிவேலுவின் ஜோடி!) சிபி, காசு இருக்கணும் ஆகிய படங்களில்கலக்கி வருகிறார் நந்தி.அவரைத் தேடி வாரத்துக்கு ஒரு பட வாய்ப்பாவது வர ஆரம்பித்துவிட்டதாம்.எல்லாமே கிளாமரில் பின்னி பெடலெடுக்கும்படியான கேரக்டர்கள்.இதனால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் நடிக்க வாய்ப்புள்ள படங்களாகதேடிப்பிடித்து நடித்து வருகிறார் நந்திதா. ஏன் இப்படி என்று கேட்டால், எங்க அப்பா சின்னா. பெரிய டான்ஸ் மாஸ்டர். 35வருஷத்துக்கும் மேலாக நல்ல பெயரெடுத்து வைத்துள்ளார். அந்தப் பெயரை நான்கெடுக்கக் கூடாதுல்லியா?. அதனால்தான் கிளாமர் ரொம்ப இருக்கும் படங்களைஒப்புக் கொள்வதில்லை என்கிறார் நந்திதா.சின்னாவோ ஒரு படி மேலே போய் தனது மகளை அன்னை வேளாங்கண்ணிகேரக்டரில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். சின்னா, வேளாங்கண்ணி பக்தர். தினசரி வேளாங்கண்ணியை வேண்டிக் கொண்டுதான்எந்த வேலையையும் செய்வாராம்.வேளாங்கண்ணி அருளால்தான் தனது மகளுக்கு சினிமா வாய்ப்பு வந்ததாக கூறும்அவர் மகளை வைத்து அன்றும் இன்றும் என்றும் வேளாங்கண்ணி என்ற படத்தைஎடுக்கப் போகிறார்.சின்னாவும், நந்திதாவும் சேர்ந்து ஆரம்பித்துள்ள ஓம் ஸ்ரீசாய் யோகதர்சஷன்அன்னதானா மற்றும் ஞானதானா என்ற அறக்கட்டளை இந்தப் படத்தைத்தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அப்படியே தனதுஅறக்கட்டளையின் மூலம் நடத்தும் அன்னதானத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்போகிறாராம் சின்னா.இப்படத்தில் வேளாங்கண்ணி ரோலில் நந்திதா நடிக்கவிருப்பதால் கிளாமர்ரோல்களை இப்போதைக்கு செய்ய மாட்டாராம். மேலும் கடுமையான விரதத்தையும்கடைப்பிடித்து வருகிறாராம்.இப்படம் வந்தவுடன் எனது நடிப்புத் திறமை பேசப்படும் என்கிறார் நந்திதா.

By Staff

கிளாமர் கிளியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஈர நிலம் நந்திதா முற்றிலும் புதியவேடத்தில், அதாவது வேளாங்கண்ணி மாதா வேடத்தில் நடிக்கப் போகிறார்.

பாரதிராஜாவின் கையால் குட்டுப்பட்டும் போணியாகாத வெகு சில நடிகைகளில்நந்திதாவும் ஒருவர். எடுப்பான தோற்றம் கொண்டவராக இருந்தும் எடுபடாமல்போன நந்திதாவுக்கு இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது.

நிறைய படங்கள் கிடைத்து வருகின்றன. வசந்தம் வந்தாச்சு, இம்சை அரசன் 23ம்புலிகேசி (இதில் வடிவேலுவின் ஜோடி!) சிபி, காசு இருக்கணும் ஆகிய படங்களில்கலக்கி வருகிறார் நந்தி.

அவரைத் தேடி வாரத்துக்கு ஒரு பட வாய்ப்பாவது வர ஆரம்பித்துவிட்டதாம்.எல்லாமே கிளாமரில் பின்னி பெடலெடுக்கும்படியான கேரக்டர்கள்.

இதனால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் நடிக்க வாய்ப்புள்ள படங்களாகதேடிப்பிடித்து நடித்து வருகிறார் நந்திதா.


ஏன் இப்படி என்று கேட்டால், எங்க அப்பா சின்னா. பெரிய டான்ஸ் மாஸ்டர். 35வருஷத்துக்கும் மேலாக நல்ல பெயரெடுத்து வைத்துள்ளார். அந்தப் பெயரை நான்கெடுக்கக் கூடாதுல்லியா?. அதனால்தான் கிளாமர் ரொம்ப இருக்கும் படங்களைஒப்புக் கொள்வதில்லை என்கிறார் நந்திதா.

சின்னாவோ ஒரு படி மேலே போய் தனது மகளை அன்னை வேளாங்கண்ணிகேரக்டரில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சின்னா, வேளாங்கண்ணி பக்தர். தினசரி வேளாங்கண்ணியை வேண்டிக் கொண்டுதான்எந்த வேலையையும் செய்வாராம்.

வேளாங்கண்ணி அருளால்தான் தனது மகளுக்கு சினிமா வாய்ப்பு வந்ததாக கூறும்அவர் மகளை வைத்து அன்றும் இன்றும் என்றும் வேளாங்கண்ணி என்ற படத்தைஎடுக்கப் போகிறார்.

சின்னாவும், நந்திதாவும் சேர்ந்து ஆரம்பித்துள்ள ஓம் ஸ்ரீசாய் யோகதர்சஷன்அன்னதானா மற்றும் ஞானதானா என்ற அறக்கட்டளை இந்தப் படத்தைத்தயாரிக்கிறது.


இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அப்படியே தனதுஅறக்கட்டளையின் மூலம் நடத்தும் அன்னதானத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்போகிறாராம் சின்னா.

இப்படத்தில் வேளாங்கண்ணி ரோலில் நந்திதா நடிக்கவிருப்பதால் கிளாமர்ரோல்களை இப்போதைக்கு செய்ய மாட்டாராம். மேலும் கடுமையான விரதத்தையும்கடைப்பிடித்து வருகிறாராம்.

இப்படம் வந்தவுடன் எனது நடிப்புத் திறமை பேசப்படும் என்கிறார் நந்திதா.

More from Filmibeat

Read more about: nandhitha to act as matha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X