1000 கோடி போட்டு எடுத்தாலும் இப்படியொரு படம் எடுக்க முடியாது.. மெய்யழகனை பாராட்டிய நானி!

சென்னை: நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்: தி தேர்ட் கேஸ் (Hit: The Third Case) திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய நடிகர் நானி திட்டமிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ்நாட்டில் இந்த படத்துக்கான புரமோஷனை ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நானி அளித்த பேட்டியில், நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தை பாராட்டி நானி பேசியது கார்த்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனங்களை களவாடியது.

Nani says if we make a 1000 crore movies too but can t make like Meiyazhagan movie

ஆனால், வசூல் ரீதியாக அந்த படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்கவில்லை என இயக்குநர் பிரேம் குமாரே ஃபீல் செய்து பல இடங்களில் பேசிய நிலையில், நானி அந்த படம் குறித்து பேசியிருப்பது நிச்சயம் அவருக்கு ஒரு நல்ல ஆறுதலை கொடுக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மெய்யழகன் போல ஒருத்தர் இருப்பாரா?: 96 படத்தை இயக்கிய பிரேம்குமாரை பலரும் பாராட்டித் தள்ளினார்கள். அந்த படம் வசூல் ரீதியாகவும் போட்ட காசுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக மாறியது. மற்ற மொழிகளிலும் 96 படத்தை ரீமேக் செய்து படங்களை உருவாக்கினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தைப் பார்த்துவிட்டு நிஜமாவே சொந்த ஊரில் இப்படியொரு சொந்தக்காரன் இருப்பானா என ஏகப்பட்ட பேர் ஏங்க ஆரம்பித்தனர்.

1000 கோடி கொடுத்தாலும்: நடிகர் நானி தனது ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்தை புரமோட் செய்வதற்காக சென்னைக்கு நடிகை ஸ்ரீனிதி ஷெட்டியுடன் இணைந்து வந்துள்ளார். செல்லும் இடங்களில் எல்லாம் யாரும் கேஜிஎஃப் ஹீரோயினை செல்ஃபி எடுப்பதற்கு கூட கண்டுக்கொள்ளவில்லை. அனைவரும் நானியையே சுற்றி சுற்றி செல்ஃபி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, 1000 கோடி போட்டு படம் பண்ணலாம். ஆனால், மெய்யழகன் படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றார்.

கார்த்தியிடம் பேசினேன்: இந்த படத்தை பார்த்துவிட்டு ஆடிப்போய்விட்டேன். நடிகர் கார்த்தியிடம் போனிலும் நேரிலும் இந்த படத்தைப் பற்றி நிறையவே பேசியுள்ளேன். இயக்குநர் பிரேம்குமாரின் படைப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று பாராட்டினார் நானி. நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி தனக்கு தமிழில் லப்பர் பந்து படம் ரொம்பவே பிடிக்கும் என்றார். நானி மெய்யழகன் படம் பற்றி பேச ஆரம்பித்ததும் அந்த படமும் தன்னுடைய ஃபேவரைட் படம் தான் என்றார்.

கார்த்தி கேமியோ: சூர்யாவின் ரெட்ரோ படத்துக்குப் போட்டியாக நானி தனது ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்தை இறக்குகிறார். ஆனால், அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் கார்த்தி நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நானியிடமே அதுகுறித்த கேள்வியை தொகுப்பாளர்கள் எழுப்ப, கடைசி வரைக்கும் என் வாயால அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன் என உறுதியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X