25 ரூபாய் சம்பளம்.. தேசிய விருது நாயகன்.. விஜயகாந்த் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறந்த எம்.எஸ்.பாஸ்கர்!
சென்னை: நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், டப்பிங் கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'விழுதுகள்' தொடரில் நடித்தார். அதன் பின் சன் டிவியில் கங்கா யமுனா சரஸ்வதி, மாயாவி மாரீசன் போன்ற சீரியல்களில் நடித்திருந்தாலும். எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவை தொடர் தான்.
அந்த தொடருக்கு பின் தமிழில் பல படங்களில், நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். பின், குணச்சித்திரமோ, வில்லன் அனைத்து ரோலிலும் திறன்பட நடித்து தனக்கு என தனி ரசிகர்கள் கூட்டத்தைவைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய 'பார்க்கிங்' படத்தில், மொத்தமாக ஈகோ பிடித்த மனிதராக நடித்து மொத்த வில்லத்தனத்தையும் காட்டி இருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில்,
kumudam யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர்: அதில், பலரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்போது தான் தேசிய விருதே கிடைத்ததா... அவர் எப்பேர் பட்ட நடிகர் இதற்கு முன்பே அவருக்கு விருது கிடைத்து இருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தற்போது தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தான், அதற்காக இதற்கு முன் என் கிடைக்கவில்லை என்ற நான் வருத்தப்பட்டது இல்லை. இன்னும் சிறப்பாக அந்த விருதுக்கா உழைக்கவில்லை என என்னை நானே தயாரிப்படுத்திக் கொள்வேன். இந்த கலைத்துறையில் எத்தனையோ திறமையானவர்கள், மிளிராமலே இருக்கிறார்கள். இதனால், நான் விருதை நினைத்து எப்போதும் ஏக்கியது இல்லை. சாதாரண ஒரு டப்பிங் கலைஞராக தொடங்கி இந்த அளவிற்கு நான் வந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கடவுள் தான். அந்த இறைவன் தான் எனக்கு உழைப்பதற்கு சந்தர்ப்பதை கொடுத்தார். அதே போல, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்றார்.
விஜய்காந்த் கொடுத்த அட்வைஸ்: 38 வருடத்திற்கு முன்பு சிட்டுக்குருவி என்கிற படத்தில் டப்பிங் கலைஞராக என் பயணத்தை தொடங்கினேன். இரண்டு பத்து ரூபாய் ஒரு ஐந்து ரூபாய் மொத்தம் 25 ரூபாய் நான் வாங்கிய முதல் சம்பளம். என் அக்கா ஒரு டப்பிங் கலைஞர், நான் அவருடன் எப்போதும் செல்வேன். அப்படி அன்று சென்ற போது, யாரோ ஒருவர் வராததால் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அந்த நாள் என் வாழ் நாளில் மறக்கவே முடியாத நாள். அன்று 25 ரூபாய் சம்பளம் வாங்கிய போதும் நான் துவண்டும் போகவில்லை, இன்று பெரிய சம்பளம் வாங்கும் போதும் தலைக்கணம் பிடித்தும் ஆடவில்லை. என் அப்பா எப்போதும் சொல்லுவார், பணம் வந்த பிறகு திமிர் வந்துவிடக்கூடாது என்று, அதே போல, விஜய்காந்த் அவர்களும் பாஸ்கரா, எந்த காலத்திலும் தலைக்கணம் வந்துவிடக்கூடாது என்பார். எனக்கு எந்த காலத்திலும் அது வரவே வராது.


Click it and Unblock the Notifications











